எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசுக்கு எதிரான கருத்துகளைப் பதிந்து வருவ தாகக் கூறி கடந்த இருவாரங்களில் 12 பத்திரிகை யாளர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட் டுள்ளன.

அயோத்தி வழக்கில், முன்பு செய்த விசார ணையை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என்றும், கோவில்கள் மதத்துடன் இணைந்தது அல்ல என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு குறித்து பத்திரிகை யாளர்கள் பலர் தங்கள் கருத்துகளை முகநூலில் பதிந்தனர். இப்படி கருத்து தெரிவித்தவர்களில், தீர்ப்பை வரவேற்காமல் விமர்சித்து எழுதியவர்களின் முகநூல் கணக்குகள்  முடக்கப்பட்டுள்ளன.

"ஜனதா கா ரிபோர்ட்டர்" (மக்களின் பதிவு) என்ற இணையதளத்தில் பணிபுரியும் ரிபாத் ஜாவத் மற்றும் "கேரவன் டெய்லி"  இதழில் பணிபுரியும் பல பத்திரிகையாளர்களின் கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன; பத்திரிகையாளர் ரிபாத் ஜாவத்  முகநூல் கணக்கு ஏற்கெனவே அவர்  ரபேல் ஊழல் குறித்து முதன் முதலில் எழுதிய நேரத்திலும் முடக்கப்பட்டது - குறிப்பிடத்தக்கது. பின் மீண்டும் அயோத்தி தீர்ப்பு வெளியானபோது கருத்து தெரிவித்ததை அடுத்து  தன் முகநூல் கணக்கு செயல்படாமல் போனதாகத் தெரிவித்தார்.

இதேபோல "தைனிக் பாஸ்கர்"  நாளிதழ் ஆசிரியர்களான பிரேமா நிகி மற்றும் அவரது கணவர் அஜய் பிரகாஷ் ஆகியோரின் முகநூல் கணக்குகளும்,  அந்நிறுவன ஊழியர்கள் அய்வரின் கணக்குகளும் முடக்கப்பட்டன. இவர்கள் ரபேல் ஊழல் குறித்து நாள்தோறும் தொடர் கட்டுரைகள் எழுதிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அரசுக்கு எதிராக கருத்தை பதிவு செய்ததாக "கேரவன் டெய்லி"  ஆசிரியர் மும்தாஸ் ஆலமின் முகநூல் கணக்கும் முடக்கப்பட்டது. இதேபோல "போல்தா இந்துஸ்தான்" (இந்தியா பேசுகிறது) செய்தி நிறுவன ஊழியர்கள் அய்வரின் கணக்குகளும் முடக்கப் பட்டன.

முகநூல் கணக்குகள் முடக்கப்படுவது குறித்து, இந்தியாவின் முகநூல் தகவல் தொடர்பு இயக்குநர் அம்ரித் அகுஜாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாகியும் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. பாசிசத்தின் கருத்தியலையும், அணுகுமுறை களையும் அறிந்தவர்களுக்கு பிஜேபி - சங்பரி வார்களின் எண்ணங்களும், கீழ்த்தரமான இத்தகு செயல்பாடுகளும் கண்டிப்பாக வியப்பினை ஏற் படுத்தாது.

எதிர்க் கருத்துகளை எதிர் கொள்வது என்பது அவர்களின் இரத்த ஓட்டத்தில் எந்த ஒரு சிறு துளியிலும் கிடையவே கிடையாது.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு ஏற்கும் அவர்களின் அணுகுமுறைகளை, நடைமுறைகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள் - இந்த உண்மையின் துல்லியம் புரியும்.

மத்தியில் பிஜேபி தலைமையில் ஆட்சி அமைந்த நாள்தொட்டு சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது எதைக் காட்டுகிறது? ஒரே ஒரு வார்த்தை இத்தகு கொலைகளைக் கண்டித்து பிரதமர் வாயிலிருந்து உதிர்ந்து இருக்குமா?

குஜராத்தில் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நரேந்திரமோடி சொன்ன பதிலைத்தான் நாடு மறக்குமா அல்லது மறுக்குமா?

நாய்க்குச் சமமாகப் படுகொலை செய்யப்பட்ட முசுலிம்களை  விமர்சித்தவர்தானே - 125 கோடி மக்களைக் கொண்ட, மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமர்? வேதனைக்குரியது என்னவென்றால் ஊடகங்களின், கருத்துரிமைகளின் கழுத்தை நெரிக்கும் இந்தப் பாசிஸ்டுகளுக்கு ஊடகங்கள் மல்லுகட்டிக் கொண்டு துணை போவதுதான்!

கடைசியாக நேற்று நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதையும் இணைத்து சிந்திக்கவும் - இதில் தமிழ்நாட்டு ஊடகங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner