எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக-வில் சேருவதற்கு முக்கிய தகுதி எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஊழல் செய்திருக்கவேண்டும், ஊழல் செய்தவருக்கு பாஜகவில் இணைய வாய்ப்பு அதிகம் உள்ளது. சாரதா சிட்பண்ட் ஊழலில் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. சாரதா சிட்பண்டில் 2013-ஆம் ஆண்டு கோடிக்கணக் கான ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததும் அது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த வழக்கை விசாரிக்க அய்பிஎஸ் அதிகாரி ராஜிவ் குமார் தலைமையில் விசார ணைக் குழு ஒன்று 2014இல் அமைக்கப்பட்டது. இந்த ஊழலில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சில தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிறகு இந்த வழக்கு சிபி அய்க்கு மாற்றப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகுல் ராய், அசாம் மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தனர். இவர்கள் வீடுகள் சிபிஅய் அமைப்பு அதிகாரிகளால் சோதனை இடப்பட்டன. அத்துடன் இவர்களிடம் தீவிர விசாரணையும் நடந்தது.

முகுல் ராய் சாரதா சிட்பண்ட் நிறுவனத் தலைவரான சுதிப்தா சென் உடன் நெருங்கிய நட்பில் உள்ளதாகக் கூறப்பட்டவர் ஆவார். சுதிப்தா சென்னின் கார் ஓட்டு நரிடம் சிபிஅய் விசாரணை நடத்தியதில் சுதிப்தா சென் கொல்கத்தாவில் இருந்து தப்பிச் செல்ல முகுல் ராய் உதவி செய்த விவரங்கள் தெரிய வந்தன. அது மட்டுமின்றி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குனால் கோஷ் கைது செய்யப்பட்ட போது சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் முகுல் ராய்க்கு பெரும் பங்கு உள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் சாரதா சிட்பண்ட் முறைகேடு புகாரில் கதாநாயகன் என்று வர்ணிக்கப்படும் முகுல் ராய் 2017ஆம் ஆண்டு அமித்ஷா தலைமையில் பாஜகவில் இணைந் தார். அதன் பிறகு சிபிஅய் இவரிடம் விசாரணை செய் வதை நிறுத்தி விட்டது. ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மாவிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு சிபிஅய் விசாரணை நடத்தி யது. அத்துடன் அவருடைய வீடு மற்றும் அவருடைய மனைவிக்குச் சொந்தமான செய்தித் தொலைக்காட்சி நிறுவன அலுவலகம் ஆகிய இடங்களில் சிபிஅய் சோதனை இட்டது. அவருக்கு மாதம் ரூ.20 லட்சம் தொகை சாரதா சிட்பண்டில் இருந்து அளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதன் பிறகு  தான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி அவர் பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு சிபிஅய் அவரிடம் விசாரணை ஏதும் நடத்தவில்லை. அது மட்டுமின்றி ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது இன்றுவரை குற்றப்பத்திரிகை பதியப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

அதேபோன்று முதல்வர் பெயரைக்கூறி மோசடி செய்து பதவியில் இருந்து நீக்கப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி பாஜகவில் இணைந்தார். மேற்கு வங்க மாநில பெண் காவல்துறை அதிகாரி பாரதி கோஷ் பணி உயர்வு மூலம் அய்பிஎஸ் அதிகாரி ஆனவர். மேலும், இவர் மீது 8.2.2018-அன்று மிரட்டி பணம் பறித்ததாக சந்தன் மாஜி என்பவரால் புகார் பதியப்பட்டது. அதை ஒட்டி இவர் இல்லத்தில் சிஅய்டி காவலர்கள் சோதனை நடத்தினர்.

அவர் இல்லத்திலும், அவருடைய நெருங்கிய உற வினர் இல்லத்திலும் சோதனைகள் நடந்தன. அப்போது பல அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாரதி யின் இல்லத்தில் ஏராளமான துப்பாக்கி உரிமம் கோரிய விண்ணப்பங்கள், வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள், வெளிநாட்டு மதுப் பாட்டில்கள் உள்ளிட்டவை கைப் பற்றப்பட்டன. இதனை அடுத்து இவர் தனக்கு எதிராக அரசியல் கட்சினர் சதி செய்கின்றனர் என்று ஊடகவி யாலாளர்களிடம் பேசினார். விசாரணையில் இவர் மீது கூறிய மோசடி புகார்கள் அனைத்தும் உண்மை என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. டில்லி வந்த பாரதி கோஷ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மூத்த பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து விஜயவர்கியா தனது டிவிட்டரில், மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. முன்னாள் அய் பிஎஸ் அதிகாரி பாரதி கோஷ் அவர்களை பாஜக குடும் பத்தில் இணைந்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன் எனப் பதிந்துள்ளார்.

ஏற்கெனவே சாரதா சிட்பண்டு ஊழலில் தொடர்புள்ள தாக கூறப்படும் முகுல் ராய்  மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றோர் பாஜகவில் இணைந்த நிலையில், மோசடிபுகாரில் சிக்கி பதவியிழந்த காவல்துறை அதி காரியும் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சி ஊழல் வாதிகளுக்கானது மட்டுமே என்பது மீண்டும் உறுதியாகி யுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் ஊழல் பேர் வழிகளின் பாவம் போக்கும்(?) "புண்ணிய நதி'தான்" - பா.ஜ.க. போலும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner