எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி மற்றும் தபால் காரர் உள்ளிட்ட  பதவிகளுக்கான 4,442 காலிப் பணி யிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு எனவும், இப்பணிக்கு  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க ஏப்ரல் 15ஆம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்  இந்த அஞ்சலக இணையதள சர்வர் மார்ச் 28ஆம் தேதி முதல்  முடங்கிக் காணப்படுகிறது.  இதனால்  பணியிடங்களுக்காக  விண்ணப்பிப்பது பாதிக்கப்பட் டுள்ளது.  இந்த சர்வர் முடக்கத்தை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என இப்பணிக்கு விண்ணப்பிக்க காத்திருப்போர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அஞ்சல் துறை அதிகாரிகள் இந்த  சர்வர் முடக்கத்தை சீர்செய்ய வேண்டும் எனவும், விண்ணப் பிக்கும் காலக்கெடு தேதியை  நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மார்ச் 15 ஆம் தேதி இந்திய அஞ்சல்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது, அதுவும் முக்கிய மாக வட இந்திய ஊடகங்களில் அதிகமாக விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில் ஒடிசா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் 5.ஆம் தேதி ஏப்ரல் அன்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டிலோ யாரும் விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு சர்வர் முடக்கப்பட்டது.  இதனை ஏதேச்சை யாக நடந்ததாக நம்ப தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். புகார்கள் தெரிவிக்கப்பட்டும் சரி செய்யாததற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பெருவாரியாக விண்ணப்பித்தனர் என்பதன் மூலம் இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி - இரகசியம் தெரிய வில்லையா?

பிரவுசிங் மய்யங்களில் 'சர்வர்' வேலை செய்யவில்லை என்ற அறிவிப்பும் தொங்குகிறது.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் இந்திக் காரர்கள் மலையாளத்தில் முதல் மதிப்பெண் பெற்றது, அவர்கள் தேர்வு நடைபெறும் மய்யத்திற்கு வினாக்கள் அடங்கிய கேள்வித்தாள் பட்டியலுடன் நுழைந்தது குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து என்.எப்.பி.இ-யின் தலைவர் ஏ.என்.நந்தா கூறியதாவது, "தமிழகத்தில் நடந்த தேர்வில் தமிழ் தெரியாத இந்தி மாணவர் தமிழ் இலக்கணத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அதே போல் சமீபத்தில் நடந்த மலையாள மொழி தேர்வில் அரியானா மாணவர் வினாக்கள் அடங்கிய கேள்வித்தாளை அலைப்பேசியில் படம் பிடித்து கொண்டு வந்துள்ளார்.  இந்த இரு சம்பவங்கள்மூலம் அஞ்சல் துறையில் மிகப்பெரும் மோசடிகள் நடைபெறுவது தெளிவாக தெரியவந்துள்ளது. ஆனால் இது குறித்து இதுவரை சம்பந்தப் பட்ட அஞ்சல் துறை எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் காத்துவருகிறது. இதன் பின்னணியில் அஞ்சல் துறையின் சில அதிகாரிகள் இருப்பதும், மிகப் பெரிய மோசடி இத்தனை நாட்களாக நடந்து வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து மத்திய அஞ்சல் துறை செயலாளர் ஆர்.என்.பரசாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்" என்றார். இவ்விவகாரம் குறித்து காசர்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கருணாகரன் கூறியதாவது, "அஞ்சல் துறையில் இந்தி பேசுபவர்களை வேண்டுமென்றே தென்மாநிலங்களுக்கு அனுப்பும் மோசடியைச் செய்து வருகின்றனர். இதனால் எங்கள் மாநிலத்தின் இளைஞர் களுக்கு வேலை கிடைக்காமல் போகிறது, இது குறித்து மோடிக்கும், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதில் இந்த விவகாரம் குறித்து சிபிஅய் விசாரணை வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளேன்" என்று கூறினார்.

இதைப் பார்க்கும் போது தென் மாநிலங்கள் அனைத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களைத் திணிக்கும் சூழ்ச்சி பின்னப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இரயில்வேயில், அஞ்சலகங்களில், வங்கிகளில் எல்லாம் தமிழ் தெரியாத இந்திக்காரர்கள் வந்து குவிந்து விட்டனர். ஏற்கெனவே ஒட்டு மொத்த வணிகங்கள் எல்லாம் வடவர்கள் கைகளில் குவிந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களிலும் வடவர் ஆதிக்கம் என்பது  அபாயகரமானதாகும். மறுபடியும் வடவர் எதிர்ப்பை முன்னிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner