எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இப்போது நமக்குச் சோதனைக் காலம், பார்ப்பனருக்குக் கூலி ஆகாதீர்.

நம் பெயரைக் கெடுத்துப் பார்ப் பனர் வெற்றி பெறப் பார்க்கின்றனர். இந்தச் சமயத்தில் உங்கள் கடமை என்ன?

திராவிட முன்னேற்றக் கழகம் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட சம்மதமாக்கி, கோயில்களிலுள்ள கடவுள்களுக்கு எல்லா ஜாதியாரும் பூசாரியாகலாம் என்றும் சட்டம் செய்த காரணத்தால், பார்ப்பனருக்கு உயர்வும்- பிழைப்பும் போய் விட்டதே என்ற காரணத்தாலும், அய்க்கோர்ட் ஜட்ஜுகளில், 18 பேர்களில் 15 பேர் நம்மவர்களாக (பார்ப்பனர் அல்லாதவராக)வும், மற்ற உத்தியோகத் தில் 100க்கு 50, 100க்கு 75 வீதம் நம்மவர்களுக்குக் கொடுத்து இருப்பதுடன், நம் பிள்ளைகள் அவரவர் ஊர்களிலிருந்தே படிக்க வசதியாக நகரங்கள் தோறும் கல்லூரிகளும், கல்லூரி முதல் வகுப்பு (பி.யு.சி.)க்கு சம்பளமில்லாமல் செய்தும்,

நம் பிள்ளைகளில் பிற் படுத்தப்பட்ட வகுப்புகளுக்குத் தாராளமாகப் பண உதவி, ஆஸ்டல், இலவச சாப்பாடு ஆகியவை கொடுத்தும், இஞ்சினியர், வைத்தியர் முதலிய படிப்புகளுக்கு நம்மவர் பிள்ளைகளையே அதிகமாய்த் தேர்ந்தெடுத்ததும், பப்ளிக் சர்வீஸ் இலாகா அதிகாரிகள் மூவரையும் நம்மவர்களாக்கி, நம்மவர் பிள்ளைகளையே அதிகமாய்த் தெரிந்தெடுக் கும்படிச் செய்திருப்பதுமான காரியங்கள், பார்ப்பனர் களுக்குத் தங்கள் சமுதாயம் அழியப் போகிறது என்று தோன்றியதால், அவர்கள் நம்மவர்களில் இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும்- பிழைக்க நினைக்கும் ஆட்களை, இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு இமயமலை அளவு பாடு படுகிறார்கள் என்பதை விளக்கிக் கூறவேண்டும்.

வீடு வீடாகப் போக வேண்டும்; விளக்கமாகப் பேசித் தெளிவுபடுத்தவேண்டும்.

எப்படி இருந்தாலும் திராவிடர் கழகத்தார் செய்ததாகச் சொல்லப்படும் காரியங்களுக்குத்- தமிழர்களுக்கு யாரும் செய்திராத, செய்ய முடியாத நன்மைகளைச் செய்த தமிழர் ஆட்சியை ஒழித்து விட்டு, கொடிய விஷமுள்ள பார்ப்பனர் தலை மையில் நடக்கும் சுதந்திரா, ஜனசங்கம்,   ஆதிக்கமுள்ள கட்சிக்கு ஓட்டுச் செய்து பழிவாங்கும்படிச் செய்தால், நம் கதி என்னவாகும் என்பதைச் சிந்திக்கும்படிச் செய்யுங்கள்.

இதில் ஏமாந்தால் நம் பின் சந்ததிகள் வாழ்வைக் கெடுத்தவர் களாவோம் என்றும், ஜாதி காப்பாற்றப் பட்டு, ஜாதித் தொழிலைச் செய்யும்படியான நிலை கட்டாயம்- சத்தியமாய் ஏற்பட்டுவிடும் என்றும் சொல்லுங்கள். பார்ப்பனரைப் போல நமக்குள்ளும் ஒற்றுமையாய் இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சொல்லுங்கள்.

17-2-1971 'விடுதலை'யில் தந்தை பெரியார்அவர்கள்  தலையங்கம்

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner