எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்விகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த மத்திய மனிதவளத்துறை முடிவுசெய்துள்ளது. தற்போது சமஸ்கிருதத்திற்கென சிறப்பு வகுப்புகள் நடத்த அந்தந்த மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கத் திட்டம் உருவாகியுள்ளது.  இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்து அது செயல்வடிவம் பெற்றுக்கொண்டு இருக்கிறது.

2013ஆம் ஆண்டு மத்திய அரசு இதே போன்ற ஒரு முடிவை எடுத்த போது மருத்துவக் கவுன்சிலுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த நிலையில் பாஜக ஆட்சிப் பதவிக்கு வந்த உடன் மருத்துவக் கவுன்சிலுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தும் அதிகாரம் வழங்கும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, பின்னர் 'நீட்' தேர்வு முறை வலுக்கட்டாயமாக அனைத்து மாநிலங்களிலும் திணிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதில் தமிழகத்தில் அரியலூர் அனிதா உட்பட 4 பேர் மரணமும் அடங்கும்.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வி அமைப்பு மத்திய மனிதவளத்துறைக்கு 21 கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்றைக் கொடுத்தது. இதில் மாநிலங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் சமஸ்கிருத வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒன்று!

தற்போது அரியானா, குஜராத், மகாராட்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சமஸ்கிருதக் கல்வி வலுக் கட்டாயமாக போதிக்கப்பட்டு வருகிறது. (மகாராட் டிராவில் இந்தி மீடியம் அல்லாதவர்கள் சமஸ் கிருதத்தைக் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது) அதாவது மராட்டி மற்றும் ஆங்கில முறையில் படிப்பவர்கள் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக எடுக்கவேண்டும் என்று உள்ளது.

குஜராத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் அனைத் திலும் முதலாம் வகுப்பிலிருந்து சமஸ்கிருதப் பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று அரசு சுற்ற றிக்கை விட்டுள்ளதாக செய்தி வெளியிடப் பட்டிருந்தது.   பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களிலும் இது விரிவு படுத்தப்படுவதாகவும், முக்கியமாக சமஸ்கிருத வகுப்புகள் சுமையாக இல்லாமல் மாலை நேர சிறப்பு வகுப்பாக நடத்தலாம் என்றும், மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய மனிதவளத்துறை உடனடியாக செய்து தருமென்றும் தேர்தல் முடிந்த பிறகு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப் படவுள்ளது.  (தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்போம்!)

முன்பு மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 3 ஆவது பாடமாக சமஸ்கிருதம் கற்பிக்கப்பட இருப்பதாக வந்த செய்தியை மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் மறுக்கவில்லை, மாறாக முன் னாள் தேர்தல் ஆணையரும், இன்றைய மத்திய அரசின் சமஸ்கிருத மேம்பாட்டுக் கழகத்தின் தலை வருமான என்.கோபால்சாமி அய்யங்கார் "சமஸ் கிருதம் மூன்றாவது மொழிப்பாடமாகக் கொண்டு வந்தால் நல்லது என்றுதான்  கோரிக்கை விடுத் திருந்தேன்" என்று எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

இவர் பிடிஅய் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த போது "சமஸ்கிருதம் -  அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் ஆய்வு செய்ய பொருத்தமான மொழி, இம் மொழியைக் கற்பவர்கள் தொழிற்கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. ஆகவே மத்திய அரசு சமஸ்கிருத மொழியை அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்க முயற்சி செய்யவேண்டும்"  என்று கூறியுள்ளார்.

நாட்டை இந்து மயமாக்க வேண்டும், இந்தியா இந்துக்களின் நாடு என்று கூறி வருபவர்கள் அதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுக்கும் விதமாக முதலில் சமஸ்கிருதக் கல்வியைத் திணிக் கிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்!

மீண்டும் மனுதர்மம், மீண்டும் பூணூல் ஆதிக்கம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner