எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை அய்.அய்.டி.யில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவர் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியினரால் தாக்கப்பட்ட செய்தி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கொதி நிலைக்கும் ஆளாயினர்.

சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க 'தினமலர்' 'துக்ளக்' ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ வார ஏடான 'விஜயபாரதம்' ஆகியவை கட்டுப்பாடாகத் திட்டமிட்ட வகையில் கோயபல்சு வேலையில் ஈடுபட்டு வருவதைக் கவனிக்க வேண்டும்.

மாணவர்கள் மாட்டுக் கறி உணவு சாப்பிட்டது மே 28. கேரளாவைச் சேர்ந்த மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது மே 30.
ஜெயின் மாணவர்கள் உணவு உட்கொள்ளும் இடத்திற்குச் சென்று மாட்டுக் கறி சாப்பிட்டனர். சிலரது வாயில் மாட்டுக் கறியைத் திணித்தனர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது யோக்கியமானதுதானா?

ஆடு, ஓநாய்க் கதையாக அல்லவா இருக்கிறது.

ஏதோ மாட்டுக்கறியை சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது தாக்கியதாகக் கதை கட்டுகிறார்களே, அது உண்மைதானா?

மாட்டுக்கறி சாப்பிட்டது புல் தரையில் தான்  (LAWN)

மாட்டுக்கறி சாப்பிட்டது 28ஆம் தேதி; இரண்டு நாள் கழித்து 30ஆம் தேதி தான் சூரஜ் தாக்கப்பட்டுள்ளார் என்பதிலிருந்து இந்தப் பார்ப்பன ஏடுகள் எழுதுவது அசல் பித்தலாட்டம் என்பதைத் தெரிந்து  கொள்ள வேண்டும்.

சூரஜைத் தாக்கிய பிகாரைச் சேர்ந்த மாணவன் மனிஷ்குமார்  மாணவர்கள் மத்தியில் தாதா மாதிரி நடந்து கொள்ளக் கூடியவர், இதற்கு முன்பும் அந்த மாணவனைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் உண்டு என்பதையெல்லாம் மறைத்து விட்டு, புதிய தலப் புராணம் எழுதும் பார்ப்பன ஏடுகளின் யோக்கியதையைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிஷ்குமார் தாக்கப்பட்டதாகவும், கை முறிந்ததாகவும் ஒரு புரட்டைக் கிளப்பி விடும் புரட்டுக் கூட்டத்தை அடையாளம் காண வேண்டும். தொலைக்காட்சிகளிலேயே இப்படி எல்லாம் பொய் மூட்டைகளை அள்ளிக் கொட்டுகின்றனர்.

பெரியார், அம்பேத்கர் பேரவை மாணவர் அமைப்பு சென்னை அய்.அய்.டி.யில் இயங்குவது இவர்களின் கண்களை உறுத்திக் கொண்டுள்ளது. அதனுடைய விபரீத விளையாட்டுதான் சூரஜ் கண்ணில் தாக்குதல்! ஒரு கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு உடைகிற அளவுக்குத் தாக்கி இருக்கிறார்கள். இதனைக் கண்டிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்மீதே பழியைப் போடும் பார்ப்பனத்தனத்தை பார்ப்பனர் அல்லாதவர்கள் தெரிந்த கொள்ளட்டும்.

தமிழ்நாடு அரசோ குற்றவாளியைக் கைது செய்யாமல் ஆர்.எஸ்.எஸின் தொங்கு சதையாகக் கொட்டாவி விட்டுக்  கொண்டுள்ளது - வெட்கக் கேடு!
- கறுஞ்சட்டை -


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner