எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஜாதி வெறியாட்டத்திற்கு தினமும் பலியாகிக்கொண்டு இருக்கும் தலித் மக்கள் தொடர்ந்து புத்த மதத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். அசோகர் மனம் மாறி புத்த மார்க்கம் ஏற்ற நாளை அசோக விஜயதசமி என்று புத்த மதத்தினர் கொண்டாடி வருகின்றனர். அன்றைய நாளில் உத்தரப்பிரதேசத்தில் 25,000 பேரும், குஜராத்தில் 3,000 பேரும் புத்தமதத்தைத் தழுவியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர், இட்டா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த தலித் மக்கள் கூறியதாவது:

‘‘சாமியார் தலைமையில்  புதிய ஆட்சி வந்த பிறகு  ஜாதிவெறி மக்களிடையே அதிகமாகி விட்டது என்றும், தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரம் சிதைக்கப் படுவதாகவும், வேலைக்குச் செல்லும் தலித்துக்கள், பள்ளி செல்லும் தலித் மாணவர்கள் என அனைவரும்  துன்புறுத்தப்படுவதாகவும், இந்த இடையூறுகளி லிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப் பின் காரணமாக, புத்த மதத்தை தழுவினோம்‘’ என்று கூறினர்.

பரோடா, உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் அசோக விஜயதசமி அன்று புத்த மதத்துக்கு மாறி உள்ளனர். பரோடாவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் மதம் மாறி உள்ளனர். போர்பந்தரைச் சேர்ந்த புத்த மத துறவியான பிரக்னா ரத்னா என்பவர் இவர்களுக்கு தீக்ஷை என்னும் மத மாற்ற நிகழ்வை நடத்தி உள்ளார்.

பாபாசாகேப் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு நாக்பூரில் லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து விஜயதசமி தினத்தன்று புத்த மதத்தைத் தழுவினார். அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்துப் போர் தொடுக்கவே புத்த மதத்தைத் தழுவினார்.   இதேபோல் கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் அசோகரும் பவுத்தம் திரும்பினார்.   இவ்வரலாற்று நிகழ்வுகளைப் பின்பற்றியே அசோக விஜயதசமியில் பல தலித்துகள் புத்த மதத்திற்குச் சென்று வருகின்றனர்.  இந்துக்களால் விஜயதசமி பண்டிகையாகக் கொண்டாடப்படுவதுபோல புத்த மதத்தினரால் அசோக விஜயதசமி எனக் கொண்டா டப்படுகிறது.

மன்னர் அசோகர் இந்த தினத்தில் கலிங்கத்து வெற்றியை கண்டு மனம் மகிழ்வதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கானோர் உயிர்  பலியாகிய கொடு மையைக் கண்டு கண்ணீர் விட்டு, அதன் விளைவாக ஏற்பட்ட மனிதநேய சிந்தனையின் அடிப்படையில் இன்னா செய்யாமையை மனதில் கொண்டு புத்த மதத்தைத் தழுவினார்.

அதன்பிறகு செய்த அருஞ்செயல்களால் இந்திய வரலாற்றில் அசோகர் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டார். அசோகர் புத்தமதம் தழுவிய பிறகு அவர் புத்தமதத்தை நாடு முழுவதும் பரவச்செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் அசோகத் தூணும், தர்மச் சக்கரமும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாகும்.

இன்று இந்திய அரசின் முத்திரையான 4 பக்கம் சிங்கத்தலை கொண்ட அசோகத் தூணும், தேசியக் கொடியின் மத்தியில் இருக்கும் தர்மச்சக்கரமும் புத்த மதத்தை உலகம் முழுக்கக் கொண்டு செல்ல பல இடங்களில் அசோகரால் பதிக்கப்பட்டவையாகும்.

இந்து மதத்தின் வருணாசிரமக் கொடுமை - உயிர்ப் பலிகள் இவற்றினை எதிர்த்துதான் மக்கள் மத்தியில்  புத்தர் பிரச்சாரம் செய்தார். அதற்கான வடிவம்தான் புத்த மார்க்கம். அது மார்க்கமே தவிர, நெறியே தவிர மதமல்ல; ஆனால், காலவோட்டத்தில் மாமனிதரான புத்தர் தெய்வமாகவும், அவரின் கோட்பாட்டு நெறியான மார்க்கம் மதமாகவும் உருமாற்றப்பட்டது என்பது மிகப்பெரிய கேடாகும்.

எந்த நோக்கத்துக்காக இந்தியாவில் புத்த மார்க்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த மார்க்கம் ஆரிய சூழ்ச்சியால் மன்னர்களின் அதிகார பலத்தால் இந்தி யாவிலிருந்து வெளிநாடுகளுக்கு விரட்டப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய இந்து மதவாத ஆட்சியின் குரூர - பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மார்க்கம் தழுவுவது புரிந்துகொள்ளத்தக்கதே! பவுத்த மதமாக ஆக்கிக் கொள்ளாமல் வாழ்வியல் நெறியாகக் கைக்கொள்ள வழிநடத்த முனைவார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner