எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'துக்ளக்' கு-மூர்த்தி ஒரு சாரை. இது கொழுத்தால் வளையில் தங்காது.

திராவிடர் கழகத்தையும், மானமிகு கி.வீரமணி அவர்களையும் சதா (சீ)தீண்டிக் கொண்டே இருக்கும்.

"ஸ்டாலின் மனைவி வாரணாசிக் கோயிலுக்குள் சென்றாரே, ராகுல் காந்தி தன்னைப் பிராமணன் என்று சொன்னாரே இது பற்றி எல்லாம் ஏன் வீரமணி கருத்துக் கூறவில்லை" என்று துக்ளக்கில் கேட்டிருக்கிறார் ('துக்ளக்', 30.1.2019).

ஸ்டாலின் மனைவி துர்கா ஒன்றும் பகுத்தறிவு வாதியல்ல. கடவுள் நம்பிக்கை உள்ளவர் - அவர் விருப்பப்படி கோயிலுக்குச் செல்ல அவருக்கு உரிமையுண்டு. வலுக்கட்டாயமாக கோயிலுக்குப் போகக் கூடாது என்று கட்டாயப்படுத்துவது - கூறுவது பகுத்தறிவு அகராதியில் இடமில்லை.

ஆர்.எஸ்.எஸின் வீரப் புருடராகத் தூக்கி நிறுத் தப்படும் வீர சாவர்க்கர் கடவுள் நம்பிக்கையற்றவர் தான் - அவரைப் பற்றி 'துக்ளக்' கு-மூர்த்தி ஏன் எழுதவில்லை என்று வீரமணி கேட்கவில்லையே!

இராகுல் காந்தி தன்னைப் பிராமணன் என்று சொல்லி விட்டாராம் - குருமூர்த்தியைக் கேட்டா லும் அப்படிதான் கூறியிருப்பார். இந்தியாவில் இந்து மதத்தில் உள்ள ஒருவர் அப்படிச் சொல்லு வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இந்துவின் 'ஆலகால நஞ்சான' ஜாதியை ஒழிக்க இந்த இந்துத்துவா கும்பல் முன் வரட்டுமே - முதலில் குருமூர்த்தி அய்யர் தன் பூணூலைக் கழற்றட்டுமே பார்க்கலாம்.

'பிராமணாள்' என்று கூறிக் கொள்வது அசிங் கமானது என்று ஒருக்கால் இவர் கருதுகிறாரா? பலே, பலே!

எதைப்பற்றி எல்லாம் வீரமணி கருத்துச் சொல்ல வேண்டும் என்ற ஒரு பட்டியலை அய்யர் வாள் தன் அலுவலக மேசையில் வைத்துள்ளாரா?

அவர் பாணியில் நாமும் கூடக் கேட்கலாம் தான்.

இராமாயணத்தில் ஆரம்பித்து, காஞ்சி லேட் - ஜெயேந்திரர் வரை ஆரம்பிக்கலாமா?

லோகக்குரு ஏன் ஜெயிலுக்குப் போனார்? மக்கள் பிரச்சினைக்காகப் போராடிப் போனாரா? மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டு கம்பி எண்ணி னாரா? கொலை வழக்கில் 80 பேருக்கு மேல் பிறழ்சாட்சி சொன்னது பற்றி ஒரு சொட்டு எழுதிய துண்டா துக்ளக்?

இந்தப் பிறழ் சாட்சிகளுக்கெல்லாம் காரணமாக இருந்த ஒரு போலீஸ் அதிகாரியை காஞ்சி மடம் நடத்தும் பல்கலைக் கழகத்தில் நிர்வாக அதிகாரி யாக நியமித்ததன் பின்னணி பற்றி 'துக்ளக்' என்றைக்காகவது எழுதியதுண்டா?

மாறாக கொலை வழக்கில் லோகக் குருவுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று எழுதிய ஏடு தானே 'துக்ளக்'.

படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் பாரியாள் பத்மா தன்னிடம் ஜெயேந்திர சரஸ்வதி பேரம் பேசினார் என்று சொன்னாரே, அது பற்றி எல்லாம் 'துக்ளக்' சிலாகித்தது உண்டா?

அக்கிரகாரத்துப் பெண்மணியும் - எழுத்தாள ருமான அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்தவர் தானே இந்தக் காமகோடி.

சங்கராச்சாரியாருக்காக வக்காலத்து வாங்கி எழுதப்போய் அந்தப் பெண்மணியிடம் 'மொத்தடி' வாங்கியவர்தானே இந்த கு.மூர்த்தி?

ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற அக்கிரகார அழகி ஜெயேந் திரரோடு பேசிய காதல் மொழிகளைப் பற்றி ஏன் குருமூர்த்தி எழுதவில்லை என்று நம் கேட்க முடியாதா?

திருப்பதி ஏழுமலையானுக்கும், திருப்பரங்குன் றம் சுப்பிரமணியனுக்கும் தங்கத்தால் பூணூல் அணிவித்து கடவுள்களையும் ஜாதி முத்திரை குத்தி சவுண்டியாக்கிய சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியின் சீடரா, ஜாதியைப் பற்றி எல்லாம் பேசுவது?

காஞ்சி மச்சேந்திரநாதர் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கோயிலின் கருவறையைக் காமக் களியாட்டப் பள்ளியறையாக மாற்றி 'மகா பாரத' முத்திரை பெற்றானே - அது பற்றி கு-மூர்த்தி ஏன் எழுதவில்லை?

சிறிவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பத்ரிநாத் என்ற அர்ச்சகப் பார்ப்பானின் ஆலிங்கன சமாச்சாரங்கள் பற்றி கு.மூர்த்தி ஏன் பேனாவைச் சுழற்றவில்லை?

ஜம்மு காஷ்மீர் - காட்வா என்னும் இடத்தில் உள்ள ஒரு கோயிலில் முஸ்லீம் சிறுமியைப் பல நாள்கள் அடைத்து வைத்து - பாலியல் வன் கொடுமைக்கு ஆட்படுத்தி - கொலை செய்தவர்கள் பற்றி கு.மூர்த்தி ஏன் எழுதவில்லை? அதில் ஈடுபட்டவர்கள் ஒரு கோயில் பூசாரி, ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு வி.எச்.பி. பிரமுகர், இந்து சுரக்ஷா மஞ்ச் என்ற இந்துத்துவா பேர்வழி ஒருவர் என்பதால் தானே எழுதவில்லை என்று 'விடுதலை' கேட்க முடியாதா?

இராமனைப் பற்றியும்., இதிகாசங்கள் பற்றியும் வரிந்து வரிந்து 'துக்ளக்'கில் எழுதுகிறார்களே - வால்மீகி இராமாயணத்தில் இராமன் பிறப்புப் பற்றி கூறப்பட்டது பற்றி எப்பொழுதாவது எழுதிய துண்டா?

இராமன் எப்படி பிறந்தான்? அந்தப் புத்திர காமேஷ்டி யாகம் பற்றி ஏன் கு.மூர்த்தி எழுத வில்லை? வெட்டுண்ட குதிரையோடும், புரோகிதப் பார்ப்பனர்களோடும் தசரதனின் தர்மப் பத்தினிகள் ........ பற்றி ஏன் எழுதவில்லை?

இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகளை கு.மூர்த்தி கண்ணோட்டத்தில் கேட்க முடியும்.

'இன்று போய் நாளை வா' என்று இப்போதைக்கு கு.மூர்த்தியை விட்டு வைப்போம் - நாளை வந்தால் நாளை மறுநாளே சந்திப்போம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner