கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சத்யா - பவீனா இணைந்து நடித்து வெளிவந்த ஒரு திரைப்படம் சூழ்நிலை - இதனை இயக்கியவர் செந்தூரன்.
நிழல்கள் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாய கனாக வரும் பார்ப்பனர் (நிழல்கள் ரவியே பார்ப்பனர் தானே!) மாமிசம் சாப்பிடுகிறாராம் - ஒரு கட்டத்தில் பூணூலையும் அறுத்து எறிகிறாராம்.

இதற்காகத் தொலைப்பேசி மூலம் இயக்குநர் செந்தூரனை மிரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இவ்வளவுக்கும் இயக்குநர் ஒன்றும் பார்ப்பனர்  எதிர்ப்பாளரல்ல; வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார்!

இந்தக் காட்சிக்கான சமாதானத்தைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்.

பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடுவது என்ன இந்தக் காலத்தில் அதிசயமா?

அந்தக் காலத்திலிருந்து ஆரியப் பார்ப்பனர்கள் மாமிசம் தின்றவர்கள்தானே!

யாகங்களில் தீ வளர்த்துக் கொல்லப்படும் மிருகங் களின் எந்தெந்த பாகத்தை எப்படியெல்லாம் ருசித்துத் தின்னவேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்கு அத்துப்படி ஆயிற்றே!

இயக்குநர் செந்தூரன் அவர்களை மிரட்டும் பார்ப் பனர்கள், ஒவ்வொரு முனியாண்டி ஓட்டல் வாசலிலும் நின்று, எந்தெந்த பார்ப்பனர்கள் சாப்பிடச் செல்லுகிறார்கள் என்று பார்த்து, சட்டையைப் பிடித்து இழுத்து, பிடரியில் இரண்டு சாத்துக் கொடுக்கவேண்டியதுதானே! யார் தடுத்தது?

பூணூலை அறுத்ததுதான் பிரச் சினை என்றால், இதற்கு முன்புகூட எத்தனையோ படங்களில் பூணூலை அறுத்து எறியும் காட்சி இடம் பெற்றுள்ளதே!

புரட்சி இயக்குநர் பாரதிராஜா எடுத்த அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது ஆகிய படங்களில் பூணூலை அறுத்தெறியும் காட்சி இடம்பெற்றதே! பார்ப்பனர்கள் அப்பொழுதெல்லாம் கண்மூடித் தவம் செய்து கொண்டு இருந்தார்களா? அஞ்ஞான வாசம்தான் செய்துகொண்டு இருந்தார்களா?

அப்படிப் பார்க்கப்போனால், காந்தியாரே பூணூலை அறுத்தெறிந்திருக்கிறாரே!

அறுத்தெறிந்தவர் சாதாரணமானவர் அல்லவே! சாதாரண ஆத்மா அல்லவே - மகாத்மாவாயிற்றே!

அவர் அறுத்தெறிந்தபோது எதிர்ப்புக் குரல் கொடுத்தவர்கள் யார் யார்?

பூணூலை அறுத்தெறிந்ததற்குக் காந்தியார் என்ன காரணம் சொன்னார்?

லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும் போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆத லால் நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு - மாசற்ற வாழ்வு வாழவேண்டும்; ஆத்மார்த்தீக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண்டும், இப்பூணூல் இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலை அணிந்துகொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் - யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணியும் உரிமையுண்டு; ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை - (சுயசரிதம்: பக்கம் 480) என்றாரே காந்தியார் - இதற்குப் பதில் என்ன?

காந்தியார் கூற்றில் கருத்துக் குழப்பம் இருக்கிறது என்றாலும், பூணூலை அறுத்து எறிந்தார் என்பதுதான் இந்த இடத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியதாகும்.

பூணூல் என்னமோ ஜாதியை, தீண்டாமையை ஒழிக்கும் தத்துவம்போல காந்தியார் கூறியிருப்பது அடிப்படையில் தவறானதே!

பூணூல் என்பதே ஜாதியின் சின்னம்தான்; அதுவும் உயர்ஜாதிக்காரர்கள் அணியும் சின்னம்தான்.

தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களோ நான்காம் ஜாதி என்று இந்து மதத்தால் அறிவிக்கப்படும் சூத்திரர்களுக்கோ இந்து சாஸ்திரப்படி பூணூல் அணிய உரிமை கிடையாதே!

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 9; சுலோகம் 224).

உயர்ஜாதி ஆணவத்தைக் காட்டும் பூணூலை அறுக்கவேண்டும் என்று இழிவுபடுத்தப்பட்ட மக்கள் நினைத்தால், திட்டமிட்டால் அதைக் குற்றமாகவோ, நியாயத்துக்கு விரோதமானதாகவோ கூடக் கருத முடியாதே!

இப்பொழுது இல்லாவிட்டாலும், அப்படி ஒரு காலம் வராது என்று கூற முடியாதே!

முஸ்தாபா கமால் பாட்சா செய்யவில்லையா?

இவ்வளவுக்கும் பூணூல் என்பது அந்தக் காலத்தில் கோவணம் கட்டுவதற்குப் பயன்படும் அரைஞாண் கயிறு என்றுதானே விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்?

இதற்கா அச்சுறுத்தல்?

- கறுஞ்சட்டை



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#2 Ajaathasathru 2012-02-24 13:00
paarpanarkal poonaaol enna terrycotton noolae pottukkollattum ! Matra jaathiyinarum poonool podukiraarkal! ellorum samam enru koil archagar kollaiyil pangiduvathutha anae! poonool poduvathaal thaangal mattume uyarntha jaathi, thuvi pirappaalan, enru matravarkalai kevalappaduthuv athu aen?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 tamilvanan 2012-02-23 00:55
காந்தியார் பார்பனர் அல்லர். எப்படி இருந்தும் பார்பனர்கள் தங்களுடைய நம்பிக்கையை அவமதிப்பது போல் இருக்கிறது என்று கூறுவதற்கு என்ன தடை? மிக மிக சிறிய மைனோரிட்டி ஆன பார்பனர்களுக்கு இந்த உரிமை கூட கிடையாதா? மற்ற வகுப்பினரை இவ்வாறு கேலி செய்தால் என்ன ஆகும் என்று சினிமா காரர்களுக்கு தெரியும்..
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh