எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை இலக்கியத் திருவிழா ஜனவரி 9 முதல் 11 வரை நடக்கிறது

சென்னை, ஜன.4 “சென்னை இலக்கியத் திருவிழாவின் நான்காம் ஆண்டு நிகழ்ச்சிகள் சென்னையில் ஜனவரி 9 முதல் 11 வரை சிறப்பாக நடைபெறவுள்ளன. இவ்விழாவைக் கொண்டாடும் நோக்கத்துடன் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் சென்னைப் பல்கலைக் கழகத்துடன் கைகோர்த்துள்ளன” என்று சென்னை இலக்கிய விழா அமைப்பின் தலைவர் லதா ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இவ்வமைப்பின் நிறுவனர்  கோ.ஒளிவண் ணன், செயலாளர் குமாரவேல், பொருளாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை இலக்கியத் திருவிழாவின் இலக்கிய நிகழ்ச்சிகள் பல்வேறு மய்யங்களில் நடைபெறவுள்ளன. கல்லூரி மாணாக் கர்களுக்கிடையேயான இலக்கியப் போட்டிகள் 7.1.2017 அன்று நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரியில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் சிந்தனைக் கீற்று, படைப்பிலக்கியம், சிறுகதை எழுதுதல், தமிழில் கவிதை எழுதுதல், ஆங்கிலத்தில் விவாத மேடை, படம் பார்த்துக் கதை சொல்லுதல், ஒற்றையர் நடிப்பு, மூளைக்கு வேலை, ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து சில காட்சிகளை நடித்தல், குழு விவாதம் ஆகியவை இடம்பெறும். போட்டிகளில் வெல்பவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்விழாவைப் பற்றி லதா ராஜன் கூறுகையில் “இந்தியாவின் அறிவுத் தலைநகரமாகப் பாராட்டப்படும் நிலையில் சென்னை உள்ளது. எனினும் தொலைக்காட்சி, இணையதளம், செல்பேசி, சமூக ஊடகம் ஆகியவற்றின் தாக்கத்தினால் பாடப்புத்தகங்களைத் தாண்டி புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. இந்நிலையில் இலக்கியம் மற்றும் கலை வடிவங்களின் வளத்தையும் செழுமையையும் பற்றி மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஊட்டி அவர்களை ஊக்கப்படுத்த வேண் டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.


இரைப்பை புற்றுநோய் குறித்த கட்டுரைகளை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்

சென்னை, ஜன.4 இரைப்பை புற்றுநோய் குறித்த கட்டுரைகளை ஜனவரி 20-க்குள் அனுப்பலாம் என்று “இஸோ இந்தியா’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவரும் இரைப்பை-குடல் நோய் சிகிச்சை நிபுணருமான சந்திரமோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:- “வயிறு-உணவுக் குழாய் புற்றுநோயை தடுக்க முடியும்-குணப் படுத்த முடியும்-இதை உலகம் உணரட்டும்‘ எனும் தலைப்பில் ஒரு பக்க அளவில், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஜனவரி 20-க்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது “டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், 103, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, சென்னை - -84’ என்ற முகவரிக்கு தபாலிலோ அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு  வலைதள முகவரியைப் பார்க்கலாம் என்று கூறி யுள்ளார்.