எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கேரளா அரசைக் கண்டித்து
கோவையில் 21ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்

கோவை, ஜன. 18- நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் உருவாகும் பவானி ஆறு கேரளாவின் முக்காலி, அட்டப் பாடி வழியாக மீண்டும் தமிழ கத்தில் நுழைந்து கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு வந்து சேர்கிறது.

பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு செல்கிறது. இந்த ஆறு, கேரள பகுதியில் இருந்து வரும்போது, அதன் ஒரு கிளை பிரிந்து சிறுவாணி அணைக்கும் செல்கிறது. பவானி ஆறு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.

கடந்த 14 ஆண்டுக்கு முன்பு கேரளா பகுதியிலுள்ள பவானி ஆற்றில் முக்காலி என்னும் இடத்தில் கேரள அரசு, தடுப் பணை கட்டும் பணியை மேற் கொண்டது. அப்போது, தமிழ கத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர், கடந்த ஆண்டு சிறுவாணி அணையின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற் சியை கேரள அரசு மேற்கொண் டது. தமிழகத்திலுள்ள பல் வேறு கட்சியினர் மற்றும் மத் திய -மாநில அரசுகளின் எதிர்ப் பால் இதுவும் தடுத்து நிறுத்தப் பட்டது.

இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு, பில்லூர் அணைக்கு முன்பாக 30 கி.மீ தூரத்தில் கேரளாவின் தேக் கோட்டை என்னும் கிராமத்தின் வழியாகச் செல்லும் பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு துவங்கி யுள்ளது. அங்கு 20 அடி உயரத் திற்கு தடுப்பணை கட்ட திட்ட மிட்டு, அதற்கான மணல், கல் மற்றும் ஜல்லி, சிமென்ட் கலவை ஆகியவற்றுடன் பணியை கேரள அரசு துவங் கியது. இதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண் டப்பட்டு வருகிறது. இப்பணியை ஒரு மாதத்தில் முடிக்க திட்ட மிட்டுள்ளது.

கேரள அரசின் இந்த நட வடிக்கையால், கோவை, திருப் பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள் ளனர். கேரள அரசின் இந்த முயற்சியை மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என ஒருமித்த குரல் தமிழகத்தில் இருந்து எழுந் துள்ளது.

இந்நிலையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், கேரள அரசை கண்டித்து கோவையில் வரும் 21ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, 29ம் தேதி ஆனைகட்டியில் இருந்து தடுப்பணை கட்டப்படும் பகு திக்கு தடையை மீறி செல்லும் போராட்டம் நடத்துவது, கேரள மாநில முதல்வர் பினராயி விஜ யன் மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பொங் கலூர் பழனிசாமி, முத்துசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட் பட 28 அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner