எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தது

சென்னை, ஜன.20 ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு, தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், சேதாரமாக 3 டிஎம்சியும் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

கண்டலேறுவில் போதிய அளவு தண்ணீர் இல்லை என கூறி 2015ஆம் ஆண்டு தண்ணீர் திறக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழங்க வேண் டிய தண்ணீரை அக்டோபர் மாதம்தான் வழங்கியது. பின் னர் திடீரென குறைத்தது. டிசம்பர் மாதம் வரை ஒரு டிஎம்சிக்கும் குறைவாகவே தண்ணீர் கிடைத்தது.

இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரி களான பூண்டி, செம்பரம் பாக்கம் ஆகிய ஏரிகள் வறண் டன. குடிநீர் பற்றாக்குறை ஏற் பட்டது. எனவே, இந்த மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத் தனர். அதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழு தினார். அதன் பேரில் கடந்த 9ஆம் தேதி தண்ணீர் திறக்கப் பட்டது. பின்னர், 12ஆம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து, கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்.

இதையடுத்து, முதலில் 500 கன அடி, 1000 கன அடி, 1500 கன அடி என படிப்படியாக திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த 17ஆம் தேதி வினாடிக்கு 1700 கன அடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்தத் தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக 152 கிமீ தூரத்தைக் கடந்து தமிழக எல்லையான ஊத்துக் கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு 3 அல்லது 4 நாட்களுக்குள் வந்து சேர வேண்டும்.

ஆனால், கடந்த 9ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று வரை தமிழக எல்லைக்கு வந்து சேரவில்லை. இதற்குக் காரணம், ஆந்திர விவசாயிகள், விவசாயத்துக்காக கிருஷ்ணா கால்வாயில் கட்டப்பட்டுள்ள சிறிய மதகுகளை திறந்து தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி விட்டதே ஆகும். 10 நாட்களாகியும் தண் ணீர் வராததால் அதிகாரிகள் திகைத்தனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் கிருஷ்ணா நீர் தமிழக எல்லை யான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டுக்கு வந்தது. வினா டிக்கு வெறும் 2 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner