எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டப் பேரவை 5 நாள்கள் நடைபெறும்
பேரவைத் தலைவர் தனபால் அறிவிப்பு

சென்னை, ஜன.24 தமிழக சட்டப் பேரவை அய்ந்து நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப. தனபால் அறிவித்தார்.  இந்த ஆண்டுக்கான (2017) கூட்டத் தொடரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றி நேற்று (23.1.2017) தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, கூட் டத் தொடரை எத்தனை நாள் களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலு வல் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் பங் கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, பேரவைத் தலைவர் ப.தனபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

பேரவை அய்ந்து நாள்கள் நடைபெறும். பேரவை செவ் வாய்க்கிழமை (ஜன. 24) காலை 10 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் பாரமலை உள்ளிட்டோ ருக்கும், முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, பத் திரிகை ஆசிரியர் சோ ராமசாமி, கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆகி யோருக்கும் இரங்கல் தெரி விக்கும் வகையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

இதன் பின், முதல்வர் ஜெய லலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பி னர்களும் பேசுவர். இதன் பின் சட்டப் பேரவை ஒத்திவைக்கப் படும்.

வரும் புதன்கிழமை (ஜன 25) பேரவைக் கூட்டம் இல்லை. வியாழக்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், இன்றைய தினம் அரசு விடுமுறையாகும். பேரவை வரும் வெள்ளிக்கிழமை மீண் டும் கூடும். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கப்படும்.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைகளுக்குப் பிறகு வரும் 30, 31 ஆகிய தேதிகளிலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத் தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறும். ஜனவரி 31-ஆம் தேதியன்று நடைபெறும் விவா தத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைவரும் பேசி முடிப்பர்.

இதன்பின், பிப்ரவரி ஒன்றாம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப் பார்.

இந்த பதிலுரையைத் தொடர்ந்து, நிகழ் நிதியாண்டுக்கான கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது வாக் கெடுப்பு நடைபெறும். மேலும், கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்யப்படும். அது ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்படும்.

மேலும், சட்ட முன்வடி வுகள் ஏதேனும் இருந்தால் அவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப் படும். பேரவை தினமும் காலை கூடியதும் கேள்வி நேரம் நடை பெறும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner