எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜல்லிக்கட்டு தடை நீங்க சரியான நடைமுறை
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை, ஜன.24 ஜல்லிக் கட்டு போட்டிகள் எந்தவிதத் தடைகளும் இல்லாமல் நடை பெற இப்போதுதான் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட் டுள்ளன என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடர்பாக நேற்று (23.1.2017) மாலை நடைபெற்ற தமிழக சட்டப் பேரவையின் கூட்டத் தில் 2017-ஆம் ஆண்டு விலங் குகள் வதைத் தடுப்பு (தமிழ் நாடு திருத்தம்) சட்ட மசோ தாவை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:

2011-ஆம் ஆண்டு ஜனவரி யில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் பிராணிகள் நலப் பிரிவு, ஜல் லிக்கட்டு நிகழ்வு, பழக்கப் பட்ட விலங்கின் செயலைக் காட்சிப்படுத்துவது எனக் குறிப்பிட்டு அவை தடை செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி, பிராணிகளுக்கு இழைக்கப் படும் தீங்கினைத் தடுத்தல் சட்டப் பிரிவு 22-ன் கீழ் புலிகள், கரடிகள் ஆகியவற்றுடன் காளை யையும் சேர்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

இதனால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு 2011-ஆம் ஆண்டு ஜூலை 11-இல் காளையையும் இந்தப் பட்டியலில் சேர்த்து அறி விக்கை ஒன்றை வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல் லிக்கட்டு நடத்தவும், மகாராஷ் டிரத்தில் காளை மாட்டுப் பந் தயத்தை நடத்தவும் முழுமை யான தடை விதித்தது.

மேலும், தமிழ்நாடு ஜல்லிக் கட்டு நெறிமுறைச் சட்டம் 2009, இந்திய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளதால், இது மத்திய சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கு எதிராக தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு உச்சநீதிமன் றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதனாலும் தடை நீடித்தது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் பிறப் பிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி டில்லிக்கு நேரில் சென்று முறை யிட்டேன்.

அப்போது, மத்திய அரசின் அறிவிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு மத்திய அரசு உறு துணையாக இருக்கும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி அளித்தார்.

ஜல்லிக்கட்டு நடைபெற மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைச் சட்ட வல்லுநர்கள் சமற்றும் அரசு உயரதிகாரி களுடன் ஆலோசித்து, மத்திய அரசின் மிருக வதைப்  தடுப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசின் சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு முர ணாக, தமிழக அரசு, மாநிலத் துக்கான சட்ட திருத்தத்தை இயற்ற இயலும். எனினும், அந்தச் சட்டத்துக்கு மத்திய அரசின் பரிந்துரையுடன், குடி யரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்.

அவசரச் சட்டம் ஏன்?

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (23.1.2017)  தொடங்கியது. சாதாரணமாக சட்ட முன் முடி வுகளுக்கான சட்டப் பேரவை ஒப்புதல் கூட்டத் தொடரின் கடைசி நாளிலேயே பெறப் படும் என்பதாலும், அதன் பின்னர், தமிழக ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதாலும், இவை அனைத் துக்கும் காலதாமதம் ஏற்படும் என்பதால், அவசரச் சட்டம் பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே அவசரச் சட்டம் ஜனவரி 21-ஆம் தேதி பிறப் பிக்கப்பட்டது.

இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான அனைத் துத் தடைகளும் நீக்கப்பட்டன. எனவே, ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்த விரும்பும் ஊர் மக்கள் தாங்கள் விரும்பும் நாளில் அதனை நடத்திக் கொள்ள முடியும். ஜல்லிக்கட்டு நடத்த சரியான நடைமுறை தற்போது தான் பின்பற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

மு.க.ஸ்டாலின்

இந்த மசோதா அறிமுக கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்த சட்ட முன்வடிவினை முழு மனதோடு வரவேற்ப தோடு ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடத்தப்படவேண்டும். தமிழர் களின் கலாசாரமாகவும் பண் பாடாகவும் தொன்றுதொட்டு இருந்து வரும் ஜல்லிக்கட்டுக்கு எந்த காலத்திலும் தடை வரக் கூடாது.

2009ஆம் ஆண்டு தி.மு.க. அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தால்தான் 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங் கும் வரை தமிழகத்தில் ஜல் லிக்கட்டு எந்த வித தடையு மின்றி நடைபெற்றது என்பதை இந்த அவையில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த பிரச்சினை நம் பிரச் சினை நம் மக்களின் பிரச்சினை  தமிழர்களின் ரத்தத்துடன் ஒன்றிப் போன பிரச்சினை.
இந்த சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்ட முன்வடிவை தி.மு.க. சார்பில் திறந்த மனதுடன் வரவேற்று ஆதரிக்கிறேன்.  இவ் வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.