எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்று (ஜன. 25)
தேசிய வாக்காளர் தினம்!

ஆண்டுதோறும் ஜன. 25ஆம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு மய்யக் கருத்தை முன் வைத்து, இந்நாளை கொண்டாடும்படி, தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது.

அதன்படி, இன்று, ஏழாவது தேசிய வாக்காளர் தினத்தின் மய்யக்கருத்து, ‘மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு அதிகாரம் அளித்தல்’ என்பதாகும். 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களும், இதுவரை, ஓட்டளிக்காத இளைய வாக்கா ளர்களும், ஓட்டளிக்கும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஊக்குவிக்கிறது தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இணைத்து, ஓட்டளிப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்த, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், விழிப் புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன; பள்ளிகள் தோறும் பல்வேறு போட்டிகளும், சிந்திக்க வைக்கும் கலை நிகழ்ச்சி களும் நடத்தப்பட உள்ளன.

‘புதியதோர் உலகம் செய்வோம்‘ என்கிற பாடல் வரிகளை உண்மையாக்க, இளைய சமுதா யமே, இன்றைய நாளை, உங்களின் நாளாக்கிக் கொள்ளுங்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்...! ஓட்டளிக்கும் கடமையை நிறைவேற்ற, உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்!