எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜல்லிக்கட்டு தொடர்பான 2 அறிவிக்கைகளையும்
திரும்பப் பெறுகிறது மத்திய அரசு


சென்னை, ஜன. 25
-ஜல்லிக்கட்டு தொடர்பாக, கடந்த 2011மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 2 அறிவிக் கைகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான முறைப்படியான மனுவை, மத்திய அரசு புதன்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசுவெளியிட்ட அறிவிக்கை மீது, விசாரணை அனைத்தும் முடிவடைந்து, அடுத்த வாரம்தீர்ப்பு வரலாம் என்றிருந்த நிலையில், மத்திய அரசு திடீரென தனது அறிவிக்கையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2011-ஆம் ஆண்டு, காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டி யலில் காளை சேர்க்கப்பட்டு, அப்போதைய மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதனால் காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், உச்சநீதிமன்றம் விதித்த நிபந்த னைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வந்தது.

ஆனால், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்பட வில்லை என்றும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பீட்டா உள்ளிட்ட பல்வேறுஅமைப்புகளின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தரத் தடை விதித்து,

1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப் பித்தது. இதனால், 2015-ஆம் ஆண்டு பொங்கல் விழாவின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்தே தமிழகத்தில் பேரெழுச்சிமிக்க போராட்டம் நடைபெற்றது. இதன்காரணமாக 2016-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் வகையில் அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது.

இது,காட்சிப்படுத்தக்கூடாத விலங் குகள் பட்டியலில் இருந்து காளையை முழு மையாக நீக்காமல், அதேநேரம் ஜல்லிக் கட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகை யில் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மத்திய அரசின் அறிவிக்கைக்கு நீதிபதிகள் இடைக் காலத் தடை விதித்தனர்.

மேலும், இந்த அறிவிக்கை செல்லுமா? என்பது குறித்து கடந்த ஓராண்டாக விசா ரணை நடைபெற்று வந்தது. அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner