எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நிலத்தடி நீரில் 97 சதவீதம் உவர் நீர்
மத்திய வாரிய அதிகாரி தகவல்

ராமநாதபுரம், ஜன.26 “இந்திய நிலத்தடி நீரில் 97 சதவீதம் உவர் நீராகவும், ஒரு சதவீதம் மட்டுமே பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் உள்ளது,’’என மத்திய நிலத்தடி நீர் வாரிய தலைமை அதிகாரி ஏ.சுப்புராஜ் கூறினார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறிய தாவது: பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நீர் எடுப்பு, கடல் நீர் புகுதல், ரசாயன கழி வுகள் நீரில் கலப்பு, உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள், நீர் மேலாண் செய்வோர் புதிய அறி வியல் தொழில் நுட்ப ரீதியில் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவில் தான் நிலத்தடி நீர் ஆய்வுப்பணி முதன்முதலாக துவங்கி உள்ளது. நிலத்தடி நீரில் 97 சதவீதம் உவராகவும், 2 சதவீதம் பனி நீராகவும், ஒரு சதவீதம் விவசாயம் உள்பட அனைத்து பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது.

இந்தியாவில் 23.25 லட்சம் ச.கி.மீ., பரப்பளவில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்படுகிறது. தேசிய அளவில் 62 சதவீதம், தமிழகத்தில் 77 சதவீதம் நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 1.05 லட்சம் ச.கி.மீ., பரப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 45 ஆயிரம் ச.கி.மீ., பரப்பில் ஆய்வு பணி நிறை வடைந்துள்ளது.

தமிழகத்தில் 73 சதவீதம் கடி னப்பாறை நிறைந்த மாவட்டங் களில் 200 மீ., ஆழத்திலும், 27 சதவீதம் மென்பாறைகள் நிறைந்த (கடலோர) மாவட்டங்களில்
300 மீ., ஆழத்திலும் நீர் எடுக்கப் படுகிறது.

நீர் மேலாண்மை திட்டம் செயல் பாட்டிற்கு வரும்போது கிராமங் கள் தோறும் நீர் கிராமம் அமைக்கப்படும். 3,000 கோடி ரூபாய் செலவில் 2012இல் துவங் கிய நிலத்தடி நீர் ஆய்வுப்பணியினை 2022இல் முடிக்க மத்திய நீர் வளத் துறை திட்டமிட்டுள்ளது, என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner