எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 28- தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) திட்டத்தில் இதுவரை சேராத நிறுவனங்கள், இத்திட் டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள 3 மாதம் கால அவ காசம் அளிக்கப்பட்டுள்ளது என்று பி.எஃப். சென்னை மண்டல ஆணையர் சலீல் சங்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சென் னையில் நேற்று (27.1.2017) செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை கூறியதாவது:

பி.எஃப். திட்டத்தில் இது வரை சேராத நிறுவனங்களைச் சேர்க்க “தொழிலாளர் சேர்க்கை முகாம் 2017’ என்ற மூன்று மாத சிறப்பு முகாம் நடை பெற்று வருகிறது.

அதாவது கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு முகாம் வரும் மார்ச் 31 -ஆம் தேதி வரை நடைபெறும். 20 தொழிலாளர் களுக்கு மேல் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட் டத்தில் சேராத நிலையில், இந்தத் திட்டத்தில் சேர இந்தக் கால அவகாசம் வழங்கப்பட் டுள்ளது. சென்னையில் உள்ள 3 மண்டல அலுவலகங்களில் மொத்தம் 22,000 நிறுவனங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்து உள்ளன. ஒப்பந்த அடிப்படை யில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் இத்திட்டத் தில் சேர்ந்து தொழிலாளர் வைப்புநிதி மற்றும் ஓய்வூதிய பயன்களைப் பெறுவதற்காகவே தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகி றது.

பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனை களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களில் பெரும்பா லானோர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேராத நிலை உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களை ஒப்பந்தப் பணியில் அமர்த்தி யுள்ள நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை இந்தத் திட்டத் தில் சேர்க்க வலியுறுத்தப்பட் டுள்ளது என்று சலீல் சங்கர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது பி.எஃப். சென்னை மண்டல துணை ஆணையர் எஸ்.ஜனார்த்த னன், சென்னை பத்திரிகை தக வல் அலுவலகத்தின் கூடு தல் தலைமை இயக்குநர் முத்துக் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.