எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில சிறப்பு தகுதி விவகாரம்
மத்திய அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார்

கிருஷ்ணா, ஜன. 28- ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்குவது குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்யுமாறு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று (27.1.2017) ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சியினர் புகார் அளித்த னர்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழ கம், புதுச்சேரி ஆகிய மாநிலங் களில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தை முன் மாதிரியாக கொண்டு, ஆந்திர மாநிலத்தின் சிறப்பு தகுதி விவகாரம் மீண்டும் எழுந்து உள்ளது. ஆளும் கட்சி தெலுங்கு தேசம், கூட்டணி கட்சியான பாஜக.வுக்கு எதிராக ஆந்தி ராவில் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந் துள்ளன.

இந்த போராட்டத்தை குடி யரசு தினத்தில் தொடங்க முயன்றபோது, முளையிலேயே கிள்ளும் விதமாக ஆந்திர அரசு அனைத்து இடங்களிலும் காவல்துறையினரை குவித்து, கட்சித் தலைவர்கள், நிர்வாகி கள், தொண்டர்கள், மாணவர் கள் என அனைவரையும் கைது செய்தனர். இதனால் முதல் நாள் போராட்டத்தில் நடை பெற இருந்த மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறவில்லை.

இந்நிலையில், மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி செய் தியாளர்களிடம் பேசும்போது “மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்குவதற்கு பதில், சிறப்பு நிதி வழங்குவதாக பிரதமர், நிதி அமைச்சர் அறிவித்துள் ளனர். எனவே, எதிர்க்கட்சியினர் போராட்டம் தேவையற் றது. தமிழகத்தில் நடந்த ஜல் லிக்கட்டு போராட்டம் போல் ஆந்திராவில் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை. தேவைப் பட்டால் இங்கு பன்றிப் பந் தயம், கோழிப் பந்தயம் போன் றவற்றை எதிர்க்கட்சிகள் நடத்தி கொள்ளலாம்” என கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (27.1.2017) மீண்டும் ஆந்திர மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர். திருப் பதியில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் கம்யூனிஸ்ட் கட்சினர் வாயில் கறுப்புத் துணி கட்டி முழங்கால் போட்டு ஆர்ப் பாட்டம் செய்தனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட் டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் தீவிர ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

மத்திய அமைச்சர் மாநில சிறப்பு தகுதி போராட்டத்தை இழிவாக பேசியதாக நேற்று கிருஷ்ணா மாவட்டம், இப்ரா கிம்பட்டினம் காவல் நிலையத் தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் புகார் அளித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner