எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிஜேபி வெளியிட்ட காலண்டரில்
அம்பேத்கர் பிறந்த நாள் 'அமங்கலமான' நாளாம்!

மும்பை, ஜன.30 பாஜக இளைஞர் பிரிவு சார்பில் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்றைய நாளை 'அமங்கலமான' நாள் என்று அம்பேத்கர் படத்தையும் போட்டு அவமரியாதை செய்துள்ளார்கள்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த 125ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுவதாக அறிவித்துக்கொள்ளும் பாஜகவின் இளைஞர் பிரிவோ 2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள காலண்டரில் அவமதிப்பை செய்துள்ளது.

அந்த காலண்டரில் பாஜகவின் சின்னத் துடன், மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படங்களுடன் மறைந்த கோபிநாத் முண்டே மற்றும் மகாராட்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோரின்  படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் சிற்பி பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் ஒரு 'அமங்கலமான' நாள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அந்த காலண்டரில் பல்வேறு நாள்களை 'மங்கலமான' நாள்கள் என்று குறிப்பிட்டுள்ள போதிலும், சில நாள்களை 'அமங்கலமான' நாள்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 அன்றைய நாள் 'அமங்கலமான' நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜகவின் இளைஞர் பிரிவாகிய 'பார திய ஜனதா யுவ மோர்ச்சா' செயலாளர் எனக் குறிப்பிட்டு மனோஜ் ராதாகிஷன் கோகடே என்பவர் இக்காலண்டரை வெளியிட்டுள்ளார்.

மராத்தி மொழியில் அச்சிடப்பட்ட காலண்டர் முதலில் இணையத்தில் பத¤ வேற்றப்பட்டுள்ளது.

பாஜகவின் இளைஞர் பிரிவு தேசிய தலைவர் பொறுப்பில் பாஜகவின் நாடாளு மன்ற உறுப்பினர் பூனம் மகாஜன் உள்ளார். காலண்டர் குறித்து, கருத்தினை பெற செய் தியாளர்கள் பலமுறை முயன்றபோதிலும், பாஜகவின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர்கள் காலண்டர்குறித்து கருத்து கூறுவதற்கு எவரும் முன்வரவில்லை.

பாஜக மத்தியில் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதிலிருந்து தாழ்த்தப்பட்டவர்கள்மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடை பெற்று வருகின்ற நிலையில், பாஜகவின்மீது தாழ்த்தப்பட்டவர்கள் கடுமையான கோபத் துடன் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் உனா மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்கு தலைத் தொடர்ந்து காவிக்கட்சிக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்கள் நாடுமுழுவதுமிருந்து திரண்டு எழுச்சியுடன் போராடினார்கள்.

எதிர்வரும் உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியப்பிரச்சினையாக  உனா சம்பவம் எதிரொலிக்கும்  நிலை உள்ளது. அம்மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிப் பவையாக இருக்கின்றன என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

ஆகவே, தாழ்த்தப்பட்டவர்களைக் கவரு வதற்காக, மோடி புதியதாக அறிமுகப்படுத் தியுள்ள பணமில்லா பரிமாற்றங்களுக்கான செயலிக்கு 'பீம்' (BHIM - Bharat Interface for Money)
என்று பெயரிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல், தாக்தோரா மைதானத்தில் 31.12.2016 அன்று மோடி பேசுகையில், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்குறித்து நினைவு கூற வேண்டிய தருணம் என்று குறிப்பிட்டார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து வரும் பாஜக, தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல் லாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக போற்றப்படுகின்ற அம்பேத்கரை இழிவுபடுத்துவதையும் செய்து வருகிறது.

தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்கு களைக்கவருவதற்காக திரிபுவாதங்களையும் தவறாமல் செய்துவருகிறது.

அம்பேத்கருக்கு 125 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவைக் கொண்டாடுவதாகக் கூறும் பாஜக, இதுபோல் காலண்டரில் அவமதிப் பையும் செய்துள்ளது.