எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.2 தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையத்தில்பொது சேவை மய்யம் தொடங்கப்பட் டது. இந்த மய்யம் மூலம் செல்போன் ரீசார்ஜ், பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய் யலாம்.

இந்திய அஞ்சல் துறையின் சார்பில் நாடு முழுவதும் குறிப்பிட்ட சில தபால் நிலையங்களில் பொதுமக்களின் வசதிக்காக பொது சேவை மய்யங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் பொது சேவை மய்யம் நேற்று (1.2.2017) தொடங்கப்பட்டது.

இந்த பொது சேவை மய்யத்தை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராதிகா சக்ரவர்த்தி தொடங்கி வைத்தார். இந்த மய்யத்தில் ஆதார் கார்டு பதிவு -திருத்தம் செய்தல், சொத்துவரி செலுத்துதல், செல்போன் ரீசார்ஜ், பாஸ்போர்ட், -பான் கார்டு விண்ணப்பித்தல், ரயில், பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்பட 13 சேவைகளை பெறலாம்.

இந்த சேவை மய்யம் குறித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராதிகா சக்ரவர்த்தி கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதன்முறையாக பொது சேவை மய்யத்தை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் இன்னும் 93 தலைமை தபால் நிலையங்களிலும் இந்த சேவை மய்யங்கள் விரைவில் தொடங்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாகவேலூர்,திரு வண்ணாமலையில் இந்த சேவைமய்யங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அத னைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும். இந்த மய் யத்தின் மூலம் பெறப்படும் சேவைகளுக்கு எந்தவித கூடு தல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.