எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாலாறின் குறுக்கே கட்டப்பட்ட
3 தடுப்பணை உயரம் அதிகரிப்பு
தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

வேலூர், பிப்.3 கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திராவில் 33 கி.மீ. பாய்ந்து தமிழகம் வருகிறது.

வேலூர், காஞ்சிபுரம் மாவட் டத்தில் 233 கி.மீ. கடந்து கட லில் கலக்கிறது. வறண்டு போன பாலாற்றில் மழைகா லங்களில் மட்டும் தண்ணீர் வருகிறது. ஆந்திர அரசு அடுத் தடுத்த தடுப்பணையை பாலாற் றின் குறுக்கே கட்டி வருகிறது.

தமிழக எல்லையான வேலூர் மாவட்டம் வாணி யம்பாடி தகரகுப்பம் அருகே உள்ள ஜோதிநகர் சாமுண்டி பள்ளம் என்கிற இடத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு சுமார் ரூ.4 லட்சம் மதிப்பில் சுமார் 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.

தற்போது சாமுண்டி பள் ளத்தில் கட்டப்பட்ட தடுப் பணையின் உயரத்தை மேலும் 7 அடி உயர்த்தி 12 அடியாக கட்டியுள்ளது. இதனால் பாலாற் றில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் கிடைக் கப்பெறாத நிலை ஏற்பட் டுள்ளது.

மேலும், சாமுண்டி பள்ளம் அடுத்த 500 மீட்டர் தூரத்தில் உள்ள சோமபள்ளம், ஒக்கல் ரேவ் பாலாற்று பகுதியில் ஏற் கனவே உள்ள தடுப்பணையை உயர்த்தி கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பணைகள் கட்டுவ தற்கான கட்டுமானப் பொருட் கள் தயார் நிலையில் வைக்கப் பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. மேலும் குப்பம் அருகே உள்ள நாயனூர் என்ற இடத்திலும் ஏற்கனவே 5 அடி உயரத்தில் உள்ள தடுப் பணையை 12 அடியாக உயர்த்த கட்டிட பணி நடக்கிறது.

அடுத்தடுத்து உயரம் கூட்டப் பட்டு வரும் தடுப்பணைகளால் மழைக் காலத்தில் கூட ஆந்தி ராவில் இருந்து பாலாற்றுக்கு சொட்டு தண்ணீர் வராது என்ற நிலை உருவாகி உள்ளது.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லையையொட்டி உள்ள புல்லூர் பெரும்பள்ளம் பகுதியில் ஏற்கனவே கட்டியிருந்த 5 அடி உயரம் உள்ள தடுப்பணையை 12 அடியாக உயர்த்தி ஆந்திர அரசு கட்டி யது. இதனை அறிந்த விவசாயிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தமிழக விவசாயி ஒருவர் இந்த தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மழை நீரை சேமித்து வைத்து வறட்சி காலத்தில் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆந்திர அரசு காரணம் கூறியது. தொடர்ந்து கடந்த ஆண்டு பெய்த வர்தா புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தின் பெரும்பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் நீர்நிலைகள் நிரம் பியதோடு பாலாற்றிலும் ஆங் காங்கே மழைநீர் பெருக்கெ டுத்து ஓடியது. இந்த நீரை சேமித்து வைக்க ஆந்திர அரசு அணையின் உயரத்தை அதிக ரித்தும் புதியதாக 2 அணைகள் கட்டவும் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
ஆந்திர அரசின் இந்த அதி ரடி நடவடிக்கையால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.