எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் ஒத்தி வைக்கப்பட்ட
மருத்துவர்கள் பணியிடத்தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை, பிப்.3 ஜல்லிக்கட்டுப் போராட்டம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவர்கள் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 1,223 பணியிடங்களுக்கு தாற் காலிக முறையில் மருத்துவர்களை நியமிக்கும் எழுத்துத் தேர்வு சென்னையில் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற இருந்தது.

ஜல்லிக்கட்டு கோரி தமிழ கத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்ததால், தமிழகத் தில் அசாதாரண சூழல் நிலவி வந்தது. இதனால் இந்தத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தேர்வுக் கான மறுதேதி மீண்டும் அறி விக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்வை நடத்தும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட் டுள்ள அறிவிப்பு:

ஏற்கெனவே ஒத்திவைக்கப் பட்ட தாற்காலிக மருத்துவர்கள் பணியிடங்களுக்கான தேர்வு பிப்ரவரி 12-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலையில் நடை பெறும்.

தேர்வில் பங்கேற்கத் தகுதி யுள்ள மாணவர்களுக்கு தேர்வுக் கான மறுதேதி குறித்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப் பப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான புதிய நுழைவுச்சீட்டை தேர்வர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner