எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வரவேற்கத்தக்க கருத்து!
“மாநிலப் பட்டியலில் கல்வி : அரசு நடவடிக்கை எடுக்கும்" - முதல் அமைச்சர்

மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்து, மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வர தமிழக அரசு அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கை யையும் மேற்கொள்ளும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று “நீட்" தேர்வை ரத்து செய்யும் சட்ட மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி பேசியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பாக பேரவையில் சட்ட மசோதா நிறை வேற்றியதுடன், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதனால், தடை இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அது போன்ற நடவடிக்கையை “நீட்" தேர்வை ரத்து செய்யும் மசோதாவுக்கும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது: “நீட் தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner