எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எண்ணெய்க் கழிவுகளை உயிரி தொழில்
நுட்பம் மூலம் அழிக்கும் பணி தொடக்கம்!

சென்னை, பிப். 5- சென்னை - எர்ணாவூர் கடற்கரையிலிருந்து எண்ணெய்க் கழிவுகளை உயிரி தொழில்நுட்பம் மூலம் அழிக் கும் பணி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நேற்று (4.2.2017) தொடங்கியது

சென்னை எர்ணாவூர் கடற் கரையிலிருந்து அகற்றப்பட்டு வரும் எண்ணெய்க் கழிவுகளை உயிரி தொழில் நுட்பம் மூலம் அழிக்கும் பணி நேற்று தொடங் கியது.

இதற்கான பணிகள் அரி யானா மாநிலம், ஃபரிதாபாதி லுள்ள இந்தியன் ஆயில் நிறு வன ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத் துறை விஞ்ஞானிகள் முன்னிலையில் எண்ணூர் காம ராஜர் துறைமுக வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.

எண்ணூர் காமராஜர் துறை முகம் அருகே கடந்த ஜனவரி 28-இல் இரண்டு கப்பல்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கப் பல்கள் சேதமடைந்தன. இதில் ஒரு கப்பலிலிருந்து எண் ணெய்ச் கசிவு ஏற்பட்டது. இது எர்ணாவூர் பாரதியார் நகர் அருகே கடற்கரையையொட்டி படிந்துள்ளது.

சுமார் 200 டன் எடையுள்ள இந்த எண்ணெய்க் கழிவுகள் ஆள்கள் மூலம் கடந்த ஒரு வாரமாக அகற்றப்பட்டு வருகி றது. அகற்றப்பட்டு வரும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் எவ்வாறு அழிக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் பொதுமக்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் எண்ணெய்க் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அழிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கடற்கரையிலிருந்து அகற்றப் பட்டு வரும் எண்ணெய்க் கழி வுகள் பிளாஸ்டிக் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே உள்ள காலியான இடத் தில் சுமார் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு சுமார் ஒன்றரை அடி ஆழமான பள் ளம் தோண்டப்பட்டு இதன்மீது தார்பாலின் பாய்கள் விரிக்கப் பட்டன.

பின்னர் எண்ணெய்க் கழிவுகளும், மணலும் கலக் கப்பட்டன. இதில் மைக்ரோ சோம்ஸ்  என்ற நுண்ணுயிரிகள் மற்றும் ஊட்டச் சத்துகள் இக் கலவையுடன் சேர்க்கப்பட்டன. இதற்கான செயல் விளக்கத்தை ஃபரிதாபாத்தில் உள்ள இந்தி யன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை விஞ்ஞானிகள் எஸ்.கே.பூரி, எம்.கே.உப்ரேதி ஆகியோர் செய்து காண்பித்தனர்.

இந்தப் பணி குறித்து விஞ்ஞானிகள் இருவரும் செய்தி யாளர்களிடம் அளித்த விளக் கம்: கப்பலிலிருந்து வெளி யேறிய எண்ணெய்க் கசிவு கடல் நீரோடு கலந்து சேறு போல் மாறிவிட்டது. எனவே இதை உயிரி தொழில்நுட்பம் மூலம் அழிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. சுமார் 200 டன் எண்ணெய்க் கழிவுகள் இவ் வாறு கலவையிடப்பட்டு பள் ளத்தில் பரப்பப்படும்.

பின்னர் இக்கலவையில் உள்ள எண்ணெய் கழிவுகள் மக்கும் தன்மை தொடர்ந்து கண்காணிக்கப்படும். சுமார் 3 மாதங்களில் முற்றிலுமாக வள மான மண்ணாக இது மாறி விடும். இதனை மரம் வளர்ப் பது முதல் அனைத்துப் பணி களுக்கும் பயன்படுத்தலாம். இத்தொழில்நுட்பம் மூலம் முற்றிலுமாகச் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner