எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை. பிப். 6- தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் புகை யிலை பொருட்களை பயன் படுத்துவோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 64 ஆயிரம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உலக புற்று நோய் தினம் கடைபிடிக்கப்பட் டது. இந்த தினத்தை முன் னிட்டு, தமிழகத்தில் புகை யிலை பொருட்களின் பயன் பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை மற்றும் வெல் வோம் புற்றுநோயை என்ற தலைப்பிலான வீடியோ, சி.டி. ஆகியவை வெளியிடப்பட்டன.

இந்த ஆய்வறிக்கையை அடையாறு புற்றுநோய் மருத் துவமனையின் தலைவர் டாக் டர் வி.சாந்தா வெளியிட்டார். அந்த ஆய்வறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மொத்த மக் கள் தொகையில் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 5.2 சதவீதம் பேர், அதாவது 28 லட்சத்து 64 ஆயிரத்து 400 பேர், புகையி லைப் பொருட்களை பயன் படுத்துவதாக கணிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 4.3 சத வீதம் ஆண்கள், 0.9 சதவீதம் பெண்கள்.

புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரில், புகை பிடிக்கும் (சிகரெட் மற்றும் பீடி) பழக்கத்துக்கு அடிமையா னவர்களின் எண்ணிக்கை 3.1 சதவீதம், அவர்களில் 3 சதவீதம் பேர் ஆண்கள், 0.1 சதவீதம் பேர் பெண்கள்.

மெல்லக் கூடிய புகையி லைப் பொருட்களை பயன் படுத்துவோர் மற்றும் மூக்குப் பொடி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.3 சதவீதமாகும்.

அதிகபட்சமாக புதுக் கோட்டை மாவட்டத்தில் 19.9 சதவீதம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்து கின்றனர். அதில், புகை பிடிப் பவர்களைவிட, மெல்லக்கூடிய புகையிலையை பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிக மாக உள்ளது.

குறைந்தபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.2 சத வீதம் பேர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்து கின்றனர். சென்னையில் அவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 6.6 சதவீதமாகும். அவர்களில் புகைப்பவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தைத் தாண்டுகிறது.

நிகழ்ச்சியில் தமிழக குடும் பநலத் துறை முதன்மை செய லாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

இந்த ஆய்வறிக்கை முக்கிய மான ஒன்றாகும். புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழகம் தான் இந்தியாவில் முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தில் இப்படிப்பட்ட ஆய்வறிக்கை தயார் செய்திருப்பது இதுதான் முதன்முறை. இனி எந்த இடத்திலெல்லாம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிக ரிக்க வேண்டும் என்பது பற் றிய ஒரு அறிவை இந்த ஆய் வறிக்கை கொடுக்கும்.

பான்பராக், குட்காவை தமிழகத்தில் தடை செய்தாலும் அதை இன்னும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என் பதை இந்த சர்வே காட்டுகிறது.

புகையிலை பொருட்களை மாணவர்களை தொட்டுவிடக் கூடாது என்பதற்கும் சட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்களை இன்னும் கண்டிப்புடன் செயல் படுத்துவோம்.

புகையிலை பொருட்கள் தரும் கேடு பற்றிய விழிப் புணர்வு இருந்தும், அதை விட முடியாதவர்களின் எண்ணிக்கை 95 சதவீதம் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அவர்களுக் கான அந்த பழக் கங்களை மாற்றுவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப் படுகின்றன. புகையிலை பொருட்கள் மீது அச்சடிக் கப்பட வேண்டிய எச்சரிக்கைப் படங்களின் அளவு 85 சதவீத மாக இருக்க வேண்டும். அதன் படி அவை உள்ளனவா என்ப தையும் அரசு உன்னிப்பாக கண்காணிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் டாக்டர் வி.சாந்தா பேசியதாவது:-

புற்றுநோய் தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள், நம் மால் முடியும், என்னால் முடி யும் என்பதாகும். புகையிலை பொருட்களுக்கான தடை 2003ஆ-ம் ஆண்டு வந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவ தில் நீண்ட காலம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதன் செயலாக்கம் போதுமானதாக இல்லை. புகையிலை கட்டுப் பாட்டு நடவடிக்கைகளை நீதி மன்றம், தன்னார்வ நிறுவனங் கள்தான் செய்கின்றன. அரசு, தானாகவே முன்வந்து அதை கட்டுப்படுத்தவில்லை.

பீடித் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர் பணி யாற்றும் நிலை தொடர்கிறது. அதிலும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 12 முதல் 14 வயதுக்குள்தான் புகையிலை பொருட்களை கையாளும் நிலை உருவாகிறது. எனவே பள்ளியிலிருந்து அவற்றின் அபாயம் பற்றிய அறிவை அவர்களுக்குள் உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங் களில் புகையிலை பொருட் களுக்கு எதிரான படங்களை கண்டிப்பாக வைக்க வேண் டும்.

புகையிலை பயன்பாட்டால் ஆண்களில் புற்றுநோயாளிக ளின் எண்ணிக்கையும், அத னால் வரும் சாவு எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. இயற்கை மரணத்துக்கு முன் பாக இறப்பவர்களில் 50 சத வீதம் பேர் புகையிலை உப யோகிப்பாளர்களாவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பங் கேற்ற டப்பிங் கலைஞர் கோபி நாயர் புகைப்பழக்கத்தை உட னடியாக கைவிடுவதாக அறிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner