எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செந்துறை, பிப். 7- கடந்த ஜனவரி 14ஆம் தேதி அரியலூர் மாவட் டம், செந்துறை அருகே கீழ மாளிகை கிராமத்தில் சிறுகடம் பூர் கிராமத்தை சேர்ந்த ராஜகிளி மகள் நந்தினி (17 வயது) என் பவர் பிணமாக கண்டெடுக்கப் பட்டார். நிர்வாண நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட நந்தினியின் உடலை பிணக் கூறு ஆய்விற்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில் கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி முன்னாள் ஒன்றிய செயலாளர் மணிகன்டனுக்கும் அந்த பெண்ணிற்கும் கட்டட வேலை பார்த்தபோது தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததால் மணிகண்டனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் மணிகண்டன் நந்தினியை ரகசியமாக அழைத் துச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந் தது. இந்த வழக்கில் தொடர் புடைய முக்கிய குற்றவாளி மணிகண்டனை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டு உள்ளார். தற்போது 2ஆவது நபராக, மணிவண்ணன் என்ப வரையும் குண்டர் தடுப்புச் சட் டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நந்தினியின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை யும் வழங்க வலியுறுத்தி விடுத லைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவள வன் அரியலூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத் தில் கூறினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார் மற் றும் திராவிடர் கழகத் தோழர் கள் பொதுமக்கள் என ஏராள மானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.