எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, பிப்.10 சிலை கடத்தல் வழக்கில் கைதான சென்னை ஆழ்வார்ப்பேட் டையை சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளனுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய அமெரிக்க வம்சாவளி தொழிலதிபரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பையில் வசித்து வருபவர் விஜய் நந்தா. இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர் பல்வேறு தொழில் களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விஜய் நந்தா மும்பையில் உள்ள தனது வீட்டில் ஏராளமான பழங்கால சிலைகளைக் கடத்தி மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு மறைத்து வைக் கப்பட்டிருந்த 2,000 ஆண்டுகள் பழமையான சிலைகள் கண்டு பிடிக்கப் பட்டன. உடனடியாக அந்தச் சிலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த சிலைகள் அனைத்தும் கிழக்கு மற்றும் தென்மாநிலங் களில் உள்ள இந்து மற்றும் புத்தர் கோயில்களில் இருந்து திருடப்பட்டவை என்றும் 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டு களைச் சேர்ந்தவை என்றும் காவல்துறையினர் தெரிவிக் கின்றனர்.

தமிழக கோயில்களில் திரு டப்பட்ட கற்சிலைகள், வெண் கல சிலைகள், யானை தந்தத்தால் ஆன சிலைகள், பழங்கால ஓவியங்கள் உட்பட ஏராளமான சிலைகளை, சென்னை தொழி லதிபர் தீனத யாளன் வீட்டில் சிலை கடத் தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிலை கடத்தல் தொடர்பாக சென்னை ஆழ்வார்ப்பேட்டை யில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் தீனதயாளனு டன், விஜய் நந்தாவுக்கு தொடர்பு இருந்ததும் விசார ணையில் தெரியவந்துள்ளது. மேலும் அமெரிக்கா, அய் ரோப்பா மற்றும் ஹாங்காங் என சர்வதேச அளவிலான கடத்தல் காரர்களுடனும் அவர் தொடர்பு வைத்திருந்ததும் அம் பலமாகியுள்ளது. அவரது வீட் டில் இருந்து புத்தர், பிள்ளை யார், மகாவிஷ்ணு, அம்மன் என பல்வேறு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner