எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம். பிப்.11 பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ரோட்டரி சங்கம் (திவாஸ்) இணைந்து சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் திருமதி ஆனந்தி முரளி அவர்கள் வரவேற் புரையாற்றும் போது சாலை விபத்து என்பது எழுதப் பட்ட விதி கிடையாது. நாம் தான் சாலை விதிகளை கடை பிடித்து நடக்க வேண்டியது தனி மனித ஒழுக்கமாகும் என்றார்.

பெரியார் மணியம்மை பல் கலைக்கழக துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் பேசுகையில்:

இந்தியாவில் உள்ள மாநிலங் களில் தமிழ்நாடு தான் சாலை விபத்தில் முதலிடத்தில் உள்ளது என்றும் மேலும் அனை வரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அழைப் பேசியில் பேசிக்கொண்டும், மது அருந்தி விட்டும், அதிவேகமாக வாகனத் தில் செல்லுவதும் விபத்தை உண் டாக்கும் ஆகை யால் உங்களது பெற்றோர்களை சோதனைக்கு உள்ளாக்காமல், நீங்களும் வேத னைகள் படாமல் இருப்பதற்கு சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் செங்குட்டுவன் உரை யாற்றும் போது:

ரோட்டரி சங்கம் பல்வேறு தொண்டுகளை மக்களுக்கு செய்து வருகிறது. அதில் முக்கிய மானது போலியோ சொட்டு மருந்து  அய்ந்து வயதிற்குட் பட்ட குழந்தைகளுக்கு ஒவ் வொரு ஆண்டும் வழங்கி வரு கிறது.

இதனால் இளம்பிள்ளை வாதத்தை முழுமையாக ஒழித்து விட்டோம் என்றும். மேலும் இரத்ததானம், உடற்கொடை கொடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தி வருகின் றோம். வட்டார போக்குவரத்து ஆய்வாளர்  விஜயக்குமார் உரை யாற்றும் போது,  மது அருந்து விட்டு வாகனம் ஒட்டுதல், தலைக் கவசம் அணியாதது, மேலும் சாலை விதிகளை பின் பற்றாததுதான் விபத்திற்கான காரணங்களாகும்.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டு மட்டும் உயிரிழப்பு 232 ஆகும். ஆகையால் வாகனம் வைத்திருப்பவர்கள் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு உரிமம், வாகன காப்பீட்டு உரி மம் ஆகியவை கண்டிப்பாக நடப்பு கணக்கில் இருத்தல் வேண்டும்.

மேலும் சுதா ஒட்டுநர் பயிற்சி பள்ளியின் தலைமை மேலாளர்  சிங்காரவேல் அவர்கள் மாணவர் களுக்கு சாலை விதிகளின் செய் கைகளை படங்கள் மூலம் விளக் கினார்.

இறுதியாக நன்றியுரையை ரோட்டரி சங்கத்தின் செயலாளர் லதாசண்முகம் அவர்கள் கூறி னார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் (திவாஸ்) பொருளாளர்  கவிதா குமார், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங் கிணைப்பாளர் சசிகலா, தேசிய மாணவர் படையின் ஒருங் கிணைப்பாளர் லெப்டினட் விஜயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.