எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.17 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், உச்சநீதிமன்ற நீதிபதியாக நிய மிக்கப்பட்டுள்ளார். இதை யடுத்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழி யனுப்பு விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை வாழ்த்தி அட் வகேட் ஜெனரல் ஆர். முத்து குமாரசாமி பேசினார்.

அப்போது, விவசாய நிலங் களை சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப் பதிவு செய்ய தடை, நீர் நிலை கள் ஆக்கிரமிப்புகள் அகற்றம்,  உள்ளிட்ட ஏராளமான தீர்ப்பு களை தலைமை நீதிபதி வழங் கியுள்ளார் என்றார்.

இதையடுத்து தலைமை நீதிபதி நன்றி தெரிவித்து பேசி னார். அப்போது அவர் பேசிய தாவது:-

நான் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவன். டில்லியில் பிறந் தவன். பஞ்சாப் அரியானா வழி யாக (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து) சென்னை வந்தவன். கிட்டத் தட்ட இரண் டரை ஆண்டுகளாக இந்த பாரம்பரிய உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந் துள்ளேன்.

தமிழக கலாச்சாரமும், பாரம்பரியமும் தலை சிறந்தது. காதல், வீரம், சுய மரியாதை தமிழக மக்களின் முக்கிய பண் புகள் ஆகும். தமிழ்மொழி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு தொன் மையான, பாரம்பரியமிக்க மொழி ஆகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் சங்க கால தமிழ் புலவர் கணி யன் பூங்குன்றனார் எழுதி யுள்ளார்.

அத்தனை பாரம்பரியம், கலாச்சாரம் உள்ள இந்த ஊரில் நான் பணியாற்றியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

உண்மையில் நான் சென் னையை விட்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. அதற்காக குட்பை என்று சொல்லிச் செல்வது இறுதியா னது கிடையாது. இங்குள்ளவர் களோடு எனது நட்பு தொடர்ந் துக் கொண்டே தான் இருக்கும்.

இந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும்போது எனக்கு மிகப் பெரிய சவால்கள் இருந்தன. தொடக்கத்தில் வழக்குரைஞர் களை நான் புரிந்து கொள்ள வில்லை. என்னை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. தற் போது அந்த நிலை மாறி விட்டது.

நான் எப்படி நீதிபதியாக செயல்பட்டேன் என்பதை நீங்களே (வழக்குரைஞர்களே) முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

அதேபோல, நீதித்துறையில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருப்பது சமுதாயத்திற்கு கடு மையான பாதிப்பை ஏற்படுத் தும். நிவாரணம் கேட்டு வரும் பொது மக்களுக்கு, அந்த நிவாரணம் உடனே கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும்.

அதனால், ஏற்கனவே உள்ள நீதிபதி காலிப்பணியிடங் களையும், எதிர்காலத்தில் உரு வாகும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நட வடிக்கை எடுப்பது அவசியமா கிறது.

நீதிமன்றம் என்பது  புனித மான இடமாகும்.  எனவே, நீதி மன்றத்தின் செயல்பாட்டிற்கு தேவையில்லாத இடையூறுகள் எப்போதும் ஏற்படக்கூடாது. இளம் வழக்குரைஞர்கள் தற்போது பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளனர். அவர்கள் முன் னேறுவதற்கு மூத்த வழக்குரை ஞர்கள் உதவவேண்டும்.

மேலும், இந்த உயர்நீதி மன்றத்திற்கு வரும் போது நான் மிகவும் குழப்பமான மன நிலையில் வந்தேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவள் ளுவர் எழுதிய, எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்ற குறளுக்கு ஏற்ப என் பணியை தொடங்கி, வெற் றியை கண்டேன்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, உயர்நீதிமன்றத்தின் ஆண்டு மலரை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் வெளியிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner