எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகுத்தறிவுச் சிந்தனை என்பது மனிதனை உருவாக்குகிறது

நீண்ட காலமாக தூங்கிக் கொண்டிருந்த

தமிழ் மக்களை தட்டி எழுப்பியவர்  பெரியார்

பொங்கல் விழாவில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் உரை

சென்னை, பிப் .18-  மனிதன் பகுத்தறிவு என்று சொல்லக்கூடிய அந்த சிந்திக்கக் கூடிய அறிவினால்தான் அவன் அறியப்படுகிறான் சிந்தனை என்பது மனிதனை உருவாக்குகிறது. அந்த சிந்தனையே இல்லாமல் நீண்ட கால மாக தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பிய பெருமை அய்யா பெரியாருக்கு உண்டு என்றார் இசை யமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் அவர்கள்.

16.1.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம். ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் இசையமைப்பாளர் எஸ்.ஏ.இராஜ்குமார் அவர்கள் உரையாற்றினார்.

என்னை என் தாய் பெற்ற நாள்போல நான் பெருமைப்படுகிறேன்

பெருமகிழ்ச்சி - மிக மகிழ்ச்சி - மிக்க மகிழ்ச்சி - திராவிடர் திருநாள் தமிழர் திருநாள் என்று எந்தப் பெயரிட்டு வழங்கினாலும், பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களால் போற்றப்படும் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பெயரால் வழங்கப்படும் இந்த விருதினை பெற்றமைக்கு என்னை என் தாய் பெற்ற நாள்போல நான் பெருமைப்படுகிறேன்.

பல விருதுகளை நான் வாங்கியிருக் கிறேன்; பல பாடல்களைப் படைத்து வெற்றி  படைத்திருக்கிறேன். நீண்ட நாள்களாக 30 ஆண்டுகளாகப் படைப்பாளியாக இருக் கிறேன். படைக்கும் திறன் என்பது சுலபத்தில் வந்ததில்லை. மக்களைப் பார்த்து உணர்ந்து, மக்களோடு பழகி, மக்களின் கதைகளைப் படித்து, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஒரு பெரிய மக்கள் கூட்டம் இருக் கும் குடும்பத்தில் பிறந்ததினால் வந்ததுதான் அந்த உணர்வுகள்.

இசை கற்றுக்கொண்டு வருவதில்லை. இயல்பாக வரவேண்டும். அப்படித்தான் எனக்கும் வந்தது. என் தந்தையார் மூலமாக எனக்கு வந்தது. ஒருவேளை அவர் விவசா யியாக இருந்தால், நான் விவசாயியாக ஆகி யிருப்பேன். ஏனென்றால், இந்தியாவில், தமிழ் நாட்டில்  அப்படித்தான் இருக்கும்.

நான் சென்னை திருவல்லிக்கேணியில் செல்வராஜ் என்கிற பாடகரின் மகனாகப் பிறந்தேன். இவ்வளவு பெரிய மீசை வைத்திருக்கின்ற வாத்தியாரிடம் நான் தமிழ் படித்திருக்கிறேன். ஆனால், எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை. அவ்வளவு பெரிய மீசையை வைத்துக்கொண்டு மிரட்டினார். தமிழ் இவ்வளவு ஸ்ட்ராங்க் என்பதுபோன்று. அதனை நான் பெருமை யாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஆசிரியர் அவர்களின் கையால் விருது வாங்கியமை எனக்குப் பெரும் பேறு

தமிழ் எனக்கு எழுதுவதற்கும், படிப்ப தற்கும் மிக இயல்பாகவே வந்தது. என்னைப் பொறுத்தவரையில், என்னுடைய பாடல் களும், என்னுடைய வெற்றிகளும் மிக எளிதா னது. நான் மிகவும் எளிமை யானவன். மக் கள்தான் அந்த வெற்றியைக் கொடுத்தார்கள். மக்கள்தான் உயர்த்துவார்கள். அந்த மக்க ளுக்கு என்ன பிடிக்கிறதோ, அதனை கண்டிப் பாக நான் செய்வேன்.

இன்றைக்கு இந்த மேடையில் இந்த அரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் வழித்தோன்றலாக இருந்து, இன்னமும் வெற்றிகரமாக இந்த தமிழ் குமுக பண்பாட்டு புரட்சி இயக்கத்தை திராவிடர் கழகம் என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களின் கையால் விருது வாங்கியமை எனக்குப் பெரும் பேறு!

என் நெஞ்சில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன

சென்னை திருவல்லிக்கேணியில் நான் சிறிய பையனாக இருக்கும்பொழுது அய்யா பெரியாரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவருடைய கருத்துகள் அந்த வயதில் எனக்கு ஏறவில்லை. அவர் பார்த்த பார்வை, அவர் அமர்ந்திருந்த தோரணை - அவரு டைய குரல் - இன்னமும் என் நெஞ்சில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

பகுத்தறிவு என்பது மனிதனின் சொத்து. அவன் விலங்கிலிருந்து வேறுபட்டது பகுத்த றிவை வைத்துதான். அதற்காக விலங்குக ளுக்கு அறிவில்லை என்று சொல்லவில்லை. நம்மைவிட நீண்ட காலம் வாழக்கூடிய திமிங்கிலங்களுக்கு மிக்க அறிவுண்டு. பெரிய ஒலிக்குறிப்புகளையெல்லாம் அதாவது சோனார் போன்ற ஒலிகளை வைத்துக் கொண்டு, இந்த பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பிய பெருமை அய்யா பெரியாருக்கு உண்டு

ஆனால், மனிதன் பகுத்தறிவு என்று சொல்லக்கூடிய அந்த சிந்திக்கக் கூடிய அறிவினால்தான் அவன் அறியப்படுகிறான்.

சிந்தனை என்பது மனிதனை உருவாக்கு கிறது. அந்தச் சிந்தனையே இல்லாமல் நீண்ட காலமாக தூங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களை தட்டியெழுப்பிய பெருமை அய்யா பெரியாருக்கு உண்டு. அவர்தான் எழுப் பினார்.

மனிதன் தன் அறிவினாலே, மனிதன் என்று அறியப்படுகிறான். அந்த அறிவை எப்பொழுதும் நாம் கூர்மையாக வைத்துக் கொள்ளவேண்டும். கேள்வி கேட்கவேண்டும்; அன்பை விதைத்து, அன்பையே அறுவடை செய்யவேண்டும்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இசையமைப்பாளர் எஸ்.ஏ. இராஜ்குமார் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner