எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

சென்னை, பிப்.22 ஜெர்மனி, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள நீதி மன்றங்களில் தாய்மொழியில் தீர்ப்பு எழுதுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு எழுத முடியவில்லையே என சென்னையில் நடைபெற்ற உலக தாய் மொழி தின பேரணியில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனையுடன் கூறினார்.

உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழ்வழிக்கல்வி இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று (21.2.2017) விழிப் புணர்வுபேரணிநடைபெற்றதுமயி லாப்பூர்மாங்கொல்லையில் இந்தப் பேரணியை நடிகர் சத்யராஜ் முன்னி லையில் முன்னாள் துணைவேந்தர் வீ.வசந்திதேவி தொடங்கி வைத்தார்.

கச்சேரி சாலை, லஸ் சர்ச் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழி யாகச் சென்ற பேரணி மயிலாப்பூர் திருவள்ளூர் சிலையை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ-, மாணவிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதி பதி அரிபரந்தாமன் பேரணியை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். அப் போது அவர் கூறியதாவது:

தாய்மொழியில்படிப்பதன்அவசி யத்தைவலியுறுத்தித்தான்உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் எத்தனை மொழிகள் வேண்டுமா னாலும் படிக்கலாம். அது அவரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. எந்த மொழிக்கும் நாம் விரோதி அல்ல.

நான் பள்ளி இறுதிப் படிப்பு வரை தமிழ் வழியில்தான் படித்தேன். உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணி யாற்றினேன். உயர்நீதிமன்றத்தில் என்னால் தமிழில் தீர்ப்பு எழுத முடியவில்லை. ஜெர்மனி, ஜப்பான், சீனா என உலகின் அனைத்து நாடு களிலும் நீதிமன்றங்களில் அந்தந்த நாடுகளில் தாய் மொழி களில்தான் தீர்ப்பு எழுதப்படுகிறது. ஆனால், தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில்தான் தீர்ப்பை எழுத வேண்டியுள்ளது.

ஒரு மொழியை தேவைப்படும்போது கற்றுக் கொள்ளலாம். ஆனால், தாய் மொழியில்தான் கல்வி பயிலவேண்டும். நம்மால் சுத்தமாக தமிழில் பேச முடியவில்லையே. தமிழில் பேச வேண்டும். தமிழில் கையெழுத்திட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.

முன்னதாக, பேரணியை தொடங்கி வைத்து முன்னாள் துணைவேந்தர் வீ.வசந்திதேவி பேசும்போது, வளர்ந்த நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில்தான் ஆங்கிலம் மோகம் நிலவுகிறது. தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமே அனைத்து வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் ஆங்கிலத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். நாம்ஆங்கிலத்தைவேண்டாம் என்றுசொல்லவில்லை.அது2ஆ-வது மொழியாகஇருக்கட்டும்.கல்வியின் அனைத்து உரிமைகளும் மாநிலங் களிடம்தான் இருக்க வேண்டும் என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசும்போது, கணிதம், அறிவியல், புவியியல் உள் ளிட்ட பாடங்களை புரியாத ஆங்கில மொழியில் படித்து என்ன பயன்? தாய்மொழியில் படிக்கும்போது குழந் தைகளுக்கு அது எளிதாக இருக்கும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் அவரவர் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,

பொதுவாக தலைவர்கள் பிறந்த தினம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில், சிறையில் நீண்ட காலம் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடு விப்பது வழக்கம். அந்த வகையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் உள்ளிட்ட தகுதியான கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு கல்வி இயக்க ஒருங்கி ணைப்பாளர் பொழிலன் அறிமுகவுரை ஆற்றினார். பேரணி முடிவில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஓவியர் வீரசந்தானம், ஆசிரியர்கள் ஜேம்ஸ், இறைபொற்கொடி, சுசிலா, ரேவதி உள் ளிட்டோரும் உரையாற்றினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner