எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, பிப். 28- நெடுவாச லில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி நடை பெற்று வரும் போராட்டத்துக்கு 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு தெரிவித்துள் ளனர். 12-வது நாளான நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, நெடுவாசல், கோட் டைக்காடு, வாணக்கன் காடு, கருக்காகுறிச்சி பகுதிகளில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன் ஜிசி நிறுவனத்தின் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குருடாயில் மற்றும் எரிவாயு கண்டறியும் சோதனை மேற் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத் திய அரசு கடந்த 15ஆ-ம் தேதி அனுமதி அளித்தது.

விவசாயத்துக்கும், மக்களுக் கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்துக்கு தடை விதிக்கவும், மத்திய அர சின் அனுமதியை ரத்து செய்ய வும் கோரி கடந்த 16-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற் காகப் பேராட்டக் குழுவையும் அமைத்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர் கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டு பேராட் டம் போல, நெடுவாசல் பேராட் டத்திலும் இளைஞர்கள், மாண வர்கள் திரளாகப் பங்கேற்று வருகின்றனர். உள்ளூர் மக்க ளுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் பட் டினிப் போராட்டம், ஆர்ப்பாட் டம் உள்ளிட்ட பேராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நெடுவாச லில் நேற்று 12-ஆவது நாளாக போராட்டம் தெடர்ந்தது. இந் தப் போராட்டத்துக்கு ஆலங் குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி பகுதிகளில் உள்ள சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு அளித்து உள்ளனர். இந்தக் கிராமங்க ளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் நேற்று, நெடு வாசலுக்கு திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் திரண்டதால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

எரிவாயு திட்டத்தைக் கைவி டுவதாக மத்திய அரசு அறிவிக் கும் வரை புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் போராட்டத்தை தொடர்வது, இந்த மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது, நெடுவாச லில் இருந்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி, மறியல், பட்டி னிப் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடு படுவது என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

காத்திருக்கும் போராட்டம்

கோட்டைக்காடு கிராமத் தில் தபால் அலுவலக வாசலில் நேற்று திரண்ட பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட் டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு அளித்து பேசினர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner