எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இங்கே  உள்ள  மாணவிகளுக்கு நான்  ஒன்றே  ஒன்றை  சொல்லிக்கொள்ள  விரும்பு கிறேன்.  நிறைய படியுங்கள்.  நிறைய  விஷயங்களை தெரிந்து  கொள்ளுங்கள்.    பெண்களுக்கு  ஆண்கள்  எதிரிகள்  இல்லை. உங்களோடு  சேர்ந்து பயணிக்கக் கூடியவர்கள் அவர்கள்.  பெண்ணியத்தைப்  பற்றி  நாமே  இந்த  அளவுக்குப்  பேச  முடியுமா என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு    பேசி யிருக்கக்கூடியவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியாரைப் பற்றிப் பேசியதும் கைதட்டுவதற்கு  இத்தனை  இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக  உள்ளது. தமிழகத்திற்கு  நல்ல  எதிர்காலம்  உள்ளது என்ற    நம்பிக்கை ஏற்படுகிறது. நிறைய  படியுங்கள்.  எந்த  மனத்தடைகளையும்  உடைத்து  எறியக்  கூடிய ஒரு  தலைவர்  இருக்கிறார்  என்றால் அவர்  தந்தை  பெரியார்.  அவரைத் தெரிந்து  கொள் ளுங்கள்.  நம்  அடையாளத்தை இழக்காமல், இந்த நாட்டைப் பாதுகாக்க,  தமிழைப்  பாதுகாக்க, தமிழ் இனத்தைப் பாதுகாக்க நம் அடையாளங்களைப் பாதுகாக்க நம்மை வழி நடத்தக் கூடிய தலைவர் தந்தை பெரியார்   அவர்கள்   என்பதை   புரிந்து கொள்ளுங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner