எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெடுவாசல், மார்ச் 27- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடு படுவோம் என நெடுவாசல் மக்கள் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார் பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த பிப்.15ஆ-ம் தேதி அறிவித்தது. இதற்கு அப்பகுதி மக் கள் எதிர்ப்பு தெரி வித்து பிப். 16ஆ-ம் தேதி முதல் நெடுவாச லில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி, மத்திய இணை அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின்படி மார்ச் 9ஆ-ம் தேதி நெடுவாசல் போராட் டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை தெரிவித்ததால் மார்ச் 24ஆ-ம் தேதி நல்லாண்டார் கொல்லையிலும், 25ஆம் தேதி வடகாட்டிலும் மக்கள் தங்க ளது தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாட் டில் நெடுவாசல், புதுச்சேரியில் காரைக் கால் உட்பட நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோ கார் பன் எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்துக்கான ஒப்பந்தம் டெல்லியில் தாஜ் மான்சிங் எனும் நட்சத்திர ஹோட்டலில் இன்று (மார்ச் 27) கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் நெடுவாசல் மட்டுமின்றி, புதுக் கோட்டை மாவட்ட மக்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் அளித்த உத்தரவாதத்தின்படி, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதையும் மீறி, இத்திட்டத்தை செயல்படுத்து வதற்கு கையெழுத்திடப்பட் டால், மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம் என நெடுவா சல் மற்றும் சுற்றுவட்டார மக் கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர் மட்டம் குறையும். அதனால் விவசாயம், குடிநீர் பாதிக்கும். சுற்றுச்சூழலும் பாதிக்கும். எனவே இத்திட்டம் வேண்டாம் என அமைச்சரிடம் தெரிவித்தோம். மனுவாகவும் அளித்தோம்.

அப்போது, கோரிக்கை மனுவை மாநில அரசுக்கும், மத்திய சுற்றுச்சூழல் துறைக் கும் அனுப்பி வைக்கிறோம். மாநில அரசு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லா மல் இத்திட்டத்தை செயல் படுத்த முடியாது. மக்களின் விருப்பத்துக்கு எதிராகவும், மாநில அரசு மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அனுமதி இல்லாமலும், இத்திட் டத்தை செயல்படுத்த முடியாது என்று மத்திய அமைச்சர் தெரி வித்தி ருந்தார்.

தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட உள்ள தாக தகவல் வெளியாகி இருப் பது மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. அவ்வாறு நடந்தால், நெடு வாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை திரட்டி மீண் டும் போராட்டத்தைத் தொடங் குவோம். இந்த திட்டம் ரத் தாகும் வரை தொடருவோம் என்றனர்.