எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாற்றம் வேண்டுமென்றால் உறுதியாக இருந்து போராடு! இந்த ஆண்டு பன்னாட்டு மகளிர் நாளுக்கான குறிக்கோள் இதுதான்.

தந்தை பெரியார் இந்த கருத்தை 1930-களிலேயே கூறிவிட்டார். அதுவும் அது எத்தகைய காலகட்டம் என்று பார்த்தால் தெரியும்; பெண்ணடிமை என்பது சட்ட மாகவே இருந்த காலம், பெண் கல்வி என்பது வெறும் .3விழுக்காடு இருந்தது. பெரியார் பெண்ணடிமையை எதிர்த்து பெண்கள் போராட வேண்டும் என்று கூறிய போது பெண்களே அவரைத் தூற் றினார்கள் கலாச்சார எதிரி என்று கூறினார்கள். ஆனால் இன்று உலகமே பெரியாரின் கருத்தை தலைமேல்கொண்டு அதைக்குறிக்கோளாக எடுத்துக் கொள் ளும்படி கூறியுள்ளது. பெரியார் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக  மேற் கொண்ட போராட்டங்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்கள் உட்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகங்களுக்குமான உரிமைகளை வென்றெடுத்து உள்ளது.

தந்தை பெரியாரின் தொடர் போராட் டங்கள் காரணமாக பெண்களுக்கான ஒடுக்குமுறைகள் குறைந்துள்ளன. மதம் கலாச்சாரம் இந்த இரண்டிலிருந்தும் விடுபட்ட பெண்கள் இன்று பெரியார் கூறிய சுதந்திரக் காற்றை அனுபவிக்கின் றனர். ஆனால் இன்றும் மதம் கலாச்சாரம் பரம்பரியம், என்ற பெயரில் பத்தாம் பசலித் தனமாக படித்த பெண்களும் இருக்கிறார் கள் என்பது மறுக்கமுடியாத உண்மை யாகும். இதன் காரணமாக ஒடுக்குமுறை களில் இருந்து பெண்களும் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாதவர் களாகவே உள்ளனர்.

இந்தியாவில் மதம் கலாச்சாரம், பண்பாடு எனறபெயரில் சமூகத்தின் மேற் கட்டுமானங்கள் இன்றும் பெண்கள் மீது இறுக்கமான கட்டுப்பாடுகளையே கொண் டுள்ளது. இக்கட்டுப்பாடுகளைத் தளர்த்து வதற்கு பொருளாதார வளர்ச்சியும் முக்கியம் என்று பெரியார் கூறினார். அதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில் இன்றும் பல தலைவர்கள் சொல்லத் தயங்கும் கருத்துக்களை துணிச்சலுடன் கூறியுள்ளார்.  வட இந்தியாவில்  பெண்கள் இவ்வாறு தான் உடையணிய வேண்டும், என்ற ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்கக் கோரும் அளவுக்கு இன்றும் நிலை உள்ளது.  கலாச்சாரம், பண்பாட்டைப் பாதுகாக் கிறோம் என்ற பெயரில் பெண்கள் மீதான அழுத்தங்கள் கட்டுப்பாடுகள் அதிகரிக் கப்பட்டே வருகின்றன.

நவீன நாகரிக உலகில் ஒருபுறம் நாம் வாழ்ந்துகொண்டு மறுபுறம்  பெண்களை ஒடுக்குகின்ற கலாசசாரம், பண்பாடு களையே பெண்கள் பாதுகாத்து வரு கின்றனர். பாலியல் ஒழுக்கம் பெண் களுக்கு மட்டுமே உரியதாக்கப்பட்டு அதனைக் காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதாக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் பெண்கள் மறுமணம் செய்துகொள்வது இன்றும் கடினமான ஒரு விடயமாகவே உள்ளது.

பாலியல் ஒழுக்கத்தை மீறுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த போதும் பழியும் பாவமும் பெண் மீதே சுமத்தப் படுகிறது. ஆண் எப்படியும் வாழலாம், பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் பெண்களின் வாழ் நிலையை தொடர்ந்தும் சீரழித்தே வரு கின்றது.

பெண்கள் மீதான வன்முறையும் முக்கியமாக இந்தியச் சமூகத்தின் மத்தியில் மோசமானதாகவே உள்ளது.  ஒரு சமூகம் முன்னேறுவதற்கு அச்சமூகத்தில் பெண் களின் கல்விநிலை உயர்வாக இருப்பது மிக முக்கியமானது. ஆனால் கல்வி என்பது என்றும் ஆணுக்கு முதன்மையானது என்ற சிந்தனை பொதுவாக  இந்தியாவில் பரவலாக உள்ளது.  பெண் என்பவள் ஆணுக்கு சேவகம் செய்பவளாகவே இன்றும் பரவலாகப் பார்க்கப்படுகிறாள்.

இவ்வளவு சிக்கலையும் கடந்து கல்வி கற்று முன்னுக்குவரும் பெண்கள் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதில் நெருக்கடி களைச் சந்திக்கின்றனர். திருமணத்தின் பின் இவர்கள் வேலை மற்றும் தொழில் செய்ய அனுமதிக்கப்படாத நிலை பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு ஆண்களின் சிந்தனைமுறை மற்றும் பெண்களே தங்களின் திறமைகளை உணராத நிலையும் காரணமாக உள்ளது. பொருளாதார நெருக்கடிகள் குடும்பத்தில் இருவரும் உழைக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிய போதும் வீட்டு வேலைகள் பெரும்பாலும் பெண்களுக்கு இரட்டிப்புச் சுமையை ஏற்படுத்துகின்றது.

இன்றும் பெண்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த தொழில்களுக்கே பயிற்றப்படு கின்றனர். பெண்களுடைய தொழில் வாய்ப்பு அதற்கான வசதிகளை ஏற் படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இன்றும் போதாமையாகவே உள்ளது. தொழில் இடங்களிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கவே செய்கின்றன. ஆண்கள் தங்கள் தொழிலில் உயர்நிலை அடைவதை உயர்வாக மதிப்பிடுவதையும் பெண்கள் தங்கள் திறமைகளினால் உயர் நிலையை அடையும் போது அதனை கொச்சைப்படுத்துவதையும் சாதாரண மாகவே பார்க்க முடிகிறது. மேலும் பெண்கள் ஆண்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதும் பொதுவான அம்சம். தையல், கற்பித்தல், கணக்கியல், மருத்துவம் போன்ற குறிப்பிட்ட துறைசார்ந்த தொழில் களுக்கே பெண்கள் கவரப்படுகின்றனர். பொறுப்பு மிக்க பதவிகளில் பெண்கள் நியமிக்கப்படுவதில் தொடர்ந்தும் தயக்கம் காட்டப்பட்டே வருகின்றது.

நடந்து முடிந்த இரு உலக யுத்தங்களும் பெண்களுக்குரிய சம உரிமையை வென் றெடுப்பதில் முக்கிய நிகழ்வாக இருந்தன. ஆண்கள் யுத்த முனைக்கு அனுப்பப்பட்ட போது பெண்கள் ஏனைய அனைத்துத் தொழில்துறைசார் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது பெண்களுடைய வாழ்நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. யுத்தம் பெரும் அழிவை ஏற்படுத்திய போதும் அதன் ஒரு பக்க விளைவாக பெண்கள் சுயாதீனமான நிலைக்கு முன்தள்ளப்பட் டனர்.

தற்போது அரபு நாடுகளில் ஏற்பட் டுள்ள புரட்சிகரமாற்றங்களுக்கு அரே பியப் பெண்கள் தங்களையும் இணைத்துக் கொண்டு உள்ளனர். அங்கு இடம்பெறு கின்ற அரசியல் விவாதங்களில் பெண்கள் முக்கிய பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை மோச மாக உள்ள ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் கூட பெண்கள் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். ஒடுக்குமுறையை அம்பலப் படுத்துகின்ற பல குறும்படங்கள், ஆவ ணப்படங்கள் பெண்களினால் வெளிக் கொண்டு வரப்படுகின்றது. மத அடிப்படை வாதத்துக்கு எதிராக இஸ்லாமியப் பெண்கள் தீவிரமாகச் செயற்படுகின்றனர். இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் இருந்து சிந்தனையாளர் பலர் தோன்றியும் உள்ள னர்.

பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, குறிப்பிட்ட சமூகத்திற்கோ உள்ள குறிப்பான பிரச் சினையல்ல. இது உலகப் பொதுப் பிரச் சினையாக உள்ளது. ஒவ்வொரு சமூகத் திலும் உள்ள பெண்கள் மாறுபட்ட பிரச் சினைகளுக்கு முகம் கொடுப்பதால் அப் பிரச்சினைகளுக்கு ஏற்ப தீர்வுகள் முன் வைக்கப்பட வேண்டும்.


ஆணுக்கு மட்டுமா?

கருணைப் பணியில் ஆண், பெண் பாகுபாடு காட்டக்கூடாது என கூறியுள்ள உயர் நீதிமன்ற மதுரை ஆயம், பணி நியமனம் நிராகரிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 மாதத்தில் வேலை வழங்க வேண்டுமென ஆணையிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த முத்துச் செல்வி, உயர்நீதிமன்ற மதுரை ஆயத்தில் தாக்கல் செய்த மனுவில், என் தந்தை வேல்முருகன் நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வாட்ச்மேனாக பணியாற்றினார். பணிக்காலத்தில் கடந்த 2012இல் உயிரிழந்தார். இதனால் எனக்கு கருணை அடிப் படையில் பணி வழங்கக்கோரி, என் தாயின் ஒப்புதல் சான்றுடன் விண்ணப்பித்தேன். எனக்கு பணி வழங்க முடியாது எனக்கூறி வாணிபக்கழக தலைவர் 20.5.2016இல் நிராகரித்து ஆணையிட்டுள்ளார். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டப்படி பெற்றோரை பராமரிப்பதில் ஆணும், பெண்ணும் சமம். எனவே அந்த ஆணையை ரத்து செய்து எனக்கு பணி வழங்க ஆணையிட வேண்டும், என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அரசமைப்புச் சட்டப்படி ஆணும், பெண்ணும் சமம். அப்படியெனில் கருணைப் பணி பெறுவதில் பெண்ணுக்கு எந்தத் தடையும் இல்லை. கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது பாலினப் பாகுபாடு காட்டக்கூடாது. ஒரே மாதிரியான நடவடிக்கைகளே இருக்க வேண்டும். எனவே, நிராகரித்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் மனுவை பரிசீலித்து அவரது தகுதிக்கேற்ற பணியை இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என ஆணையிட்டார்.

- நன்றி: “சட்டக்கதிர்”, மார்ச் - 2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner