எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப். 2- வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழ் நாட்டில் வரலாறு காணாத வகையில் வறட்சி நிலவுகிறது.

140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி இருப்பதால் அணைகள் வறண்டு காணப் படுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள 15 முக்கிய அணைகளின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து உள்ளது.

மொத்த கொள்ளளவில் 8 சதவீதம் நீர் இருப்பு குறைந்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது.

காவிரி டெல்டா விவசாயி களின் வாழ்வாதாரமாக மேட் டூர் அணை உள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை விவசாயிகளின் உயிர் நாடியாக இருந்து வருகி றது.

மேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டது. 93.47 டி.எம்.சி. நீர் கொள்ளளவை கொண்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு அணை முழு கொள்ளளவை எட்ட வில்லை. பருவமழை பொய்த் ததால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் அதிகபட்சம் 75 அடி நீர் தேங்கியது.

தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் மேட் டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 27.43 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 கன அடியாக இருக்கிறது. 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட் டம் வெகுவாக குறைந்து வரு கிறது. இதனால் மேட்டூர் அணையை நம்பி இருக்கும் 11 மாவட்டங்களில் குடிநீர் தட் டுப்பாடு அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பவானி சாகர் அணையின் மொத்த கொள்ளளவு 32.8 டி.எம்.சி. ஆகும். தற்போது இந்த அணையில் 2.6 டி.எம்.சி. தண்ணீர்தான் இருக்கிறது. இதே போல முல்லை பெரி யாறு, வைகை, பாபநாசம், சாத்தனூர் உள்பட முக்கிய அணைகளின் நீர்மட்டம் மிக வும் வேகமாக குறைந்து வரு கிறது.

இதனால் மாநிலம் முழு வதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ் நிலை உருவாகி உள்ளது.

தென் மேற்கு பருவ மழை தொடங்க இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. அதுவரை அணை களின் நீர்தேக்கம் முற்றிலும் வறண்டு போய் விடும். கோடை மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினையை சமா ளிக்க இயலும்.