எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல்

துணை ராணுவப் படை

சென்னை, ஏப். 6- ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணை காமராஜர் சாலையில் மாநகராட்சி பள் ளியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் களின் விவரங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை தேர்தல் பார்வையாளர் பிரவீன்பிரகாஷ், மனோகர் அகர்வால், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் பி.நாயர், மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் நேற்று (5.4.2017) பார்வையிட்டனர்.

பின்னர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின்னணு வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படும் பணி நிறைவடைந்ததும், சீல் வைக்கப்பட்டு மத்திய பாதுகாப்பு காவல்துறையிடம் அவை ஒப்படைக்கப்படும். 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். இதனை தேவைப்பட்டால் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிடலாம். 11ஆம் தேதி காலை முதல் அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் மின்னணு எந்திரம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். செவ்வாயன்று (4.4.2017) மட்டும் ஆர்.கே.நகரில் 19 தேர்தல் புகார்கள் வந்தன. அதன் பேரில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுவரையில் 800 துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புக்கு வந் துள்ளனர். தேவைப்பட்டால் மத்திய அரசு மேலும் துணை ராணுவப்படையை அனுப்ப தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக நூறு விழுக் காடு வாக்குப் பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.


உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு கேவியட் மனு தாக்கல்

புதுடில்லி, ஏப்.6 தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அதில் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்கும் வகையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்கள்.

இது தொடர்பான உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு ஏதேனும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால் அந்த மனுவின் மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு, தனது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று கோரி அய்யாக்கண்ணு உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அய்யாக்கண்ணு சார்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஜி.எஸ்.மணி நேற்று இந்த மனுவை தாக்கல் செய்தார்.ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்வேன்: மார்கண்டேய கட்ஜூ உறுதி

வாஷிங்டன், ஏப்.6 சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத் தில் நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் மார்கண்டேய கட்ஜூ. இவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றா லும், தமிழ் மொழி மீது பற்று கொண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்தவர். இதனால் தமிழர்கள் மற்றும் தமிழர் கலாசாரத்தின் மீதும் மதிப்பு கொண்டார். ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

மார்கண்டேய கட்ஜூ கடந்த வாரம் அமெரிக்கா சென்று, அங்கு தமிழர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி, தமிழக விவசா யத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் பால்பாண்டியன், சுபின், வெற்றிசெல்வன், சக்தி, கால்டுவெல் வேல்நம்பி, ஹூஸ்டன் பெருமாள், வெர்ஜீனியா கவிதா உள்பட பலர் மார்கண்டேய கட்ஜூவை சந்தித்து, நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றியும், அதன் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர்.

மக்கள் வசிக்காத பாலைவனத்தில் மேற்கொள்ள வேண் டிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, நன்றாக விவசாயம் நடைபெறும் பூமியில் மேற்கொண்டு, அந்த இடத்தை பாலைவனமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக அவர்கள் கூறினர். அவர்களிடம் மார்கண்டேய கட்ஜூ கூறியதாவது:-

மக்களையும், விவசாயத்தையும், குடிநீரையும், சுற்றுச் சூழலையும் பாதிக்காத அறிவியல் தான் நமக்கு வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம் விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கும் என்றால், அந்த திட்டம் தமிழகத்துக்கு வேண்டாம். அரசாங்கம் வியாபார நோக்கத்தில் செயல்படக் கூடாது. முதலில் மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடும் தமிழக மக்களுக்கு சட்டப்படியான உதவிகளை செய்வேன். போராடுபவர்கள் அழைப்பு விடுத்தால், தமிழ்நாட்டுக்கு நேரில் செல்வேன். இந்த திட்டத்தை முற்றிலும் தடை செய்ய உதவி செய்வேன்.

அமைதி வழி போராட்டங்கள் நடத்த ஒவ்வொருவருக்கும் சட்டத்தில் உரிமை உண்டு. இந்த உரிமையை தடுப்பது மனித உரிமை மீறல். தமிழ்நாட்டில் அண்மையில் உழவே தலை மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுப்பது மனித உரிமை மீறல்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner