எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, ஏப்.7 காவிரி நடுவர் மன் றத்தை கலைத்து விட்டு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கடந்த மார்ச் 28ஆ-ம் தேதி தொடங்கி, இரவு பகலாக நடத்தி வரும் காத்தி ருக்கும் முற்றுகைப் போராட்டம், நேற்று (6.4.2017) 10ஆ-ம் நாளை எட்டியது.

இந்தப் போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயன் புரம் சி.முருகேசன் உட்பட பல்வேறு அமைப்பினரும் விவசாய அமைப்பு களின் தலைவர்களும் பங்கேற்று வரு கின்றனர்.

இப்போராட்டத்துக்கு, ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், அரசியல் கட்சிகள், இயக் கங்களின் தலைவர்கள், இளைஞர்கள், மாண வர்கள், பெண்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல் வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வணிகர் அமைப்புகள், இயக்கங்கள் போராட்டப் பந்தலில் தங்கியுள்ள விவ சாயிகள், இளைஞர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொடுத்துச் செல்கின்றனர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்த நாளை யொட்டி, நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் நம்மாழ்வார் முகமூடி அணிந்து, அவர் வலியுறுத்திய இயற்கை விவசாயம், காவிரியில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தியும், விவசாயத் தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக் கம் மற்றும் மீத்தேன் திட்டம் ஆகிய வற்றுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவது என உறுதிமொழியேற்றனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங் கிணைப்பாளர் பெ.மணியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டுக்கு 3 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிடம் தமிழக அரசு அதிகாரிகள் கருணை அடிப் படையில் கேட்டனர். ஆனால், கர் நாடக முதல்வர், தண்ணீர் தர முடியாது என கூறிவிட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் நாள் தோறும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகா வுக்கு கடந்த 21ஆ-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. எனினும், அதை செயல்படுத்த கர்நாடகா மறுத்து வருகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக, இந்த நெருக்கடி காலத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய் வதுடன், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை செயல் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய மனு போட போர்க்கால அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் செயல்பட மறுக்கிறார். அவரது அலட் சியம் தொடர்ந்தால், அதற்கான அரசி யல் பலனை எதிர்காலத்தில் அவரும், அவரது கட்சியும் அறுவடை செய்ய நேரிடும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner