எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.8 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கு வருகிற 21-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 3 ஆயிரத்து 40 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 839 அரசு மேல் நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 8-ஆம் தேதி தொடங்கி 29-ந்தேதி முடிவடைந்தது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி முடிந்தது.

பிளஸ்-1 மாணவர்களுக்கு தேர்வு முடிந்து விட்டது. 6-ஆவது முதல் 9ஆ-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.

உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் வருகிற 20-ஆம் தேதி இந்த கல்வி ஆண் டின் கடைசி வேலை நாளாகக் கொண்டுள்ளது. 21-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை கால விடுமுறை விடப்படுகிறது. தொடக்க கல்வித்துறையில் அரசு தொடக்கப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள் மொத்தம் 33 ஆயிரம் உள்ளன. இந்த பள் ளிகளில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு முடிந்து வருகிற 28-ஆம் தேதி கடைசி வேலைநாளாக உள்ளது. இந்த பள்ளிகளுக்கு 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறையாகும்.

கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படும். அன்றைய தினம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் மறு நாள் திறக்கப் படும். எனவே வருகிற கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் கடினமாக இருப்பதால் பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கிறார்கள். பிளஸ்-1 வகுப்புகள் அனைத்தும் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகு திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதியும், பிளஸ்-1 வகுப்பு தொடங்கும் தேதியும் இன்னும் அறிவிக்கப் படவில்லை.

இந்த தகவலை பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner