எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை, ஏப். 9-- வாழ வழியின்றி தவிக்கும் எங்கள் அரி மளம் பேரூராட்சிக்கும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத் தின் கீழ் வேலை வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் அரி மளம் பேரூராட்சியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான பெண் கள் வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்று கையிட்டுப் போராட்டம் நடத் தினர்.

சிற்றூராட்சி என்பது குறைந்த மக்களையும் குறைந்த பரப்பளவையும் கொண்டும், பேரூராட்சி என்பது கொஞ்சம் விரிந்த அளவில் பரப்பளவை யும் சற்று முதல்நிலை, தேர்வு நிலை, சிறப்பு நிலை என பேரூராட்சிகள் மூன்று வகை களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்புநிலைப் பேரூ ராட்சி கொஞ்சம் நகராட்சியின் சாயலில் தெருக்களும், குடியி ருப்புகளும், வியாபார நிறுவ னங்களும் கொண்டதாக இருக் கும்.

அதிலும் (ஒருசில தவிர) புறநகர் பகுதி விவசாயம் சார்ந்ததாகவே இருக்கும். தேர்வுநிலை பேரூராட்சிகளில் பாதி அளவு விவசாயம் சார்ந்த பகுதிகளாகவே இருக்கிறது. முதல்நிலை பேரூராட்சிகளின் மையப்பகுதியில் ஒன்றிரண்டு கடைத்தெருக்களைத் தவிர முற்றிலும் சிற்றூராட்சியைப் போலவே இருக்கும். பேரூராட் சிக்கான பரப்பளவும் மக்கள் தொகையும் வேண்டும் என்ப தற்காக பல்வேறு குக்கிராமங் களை இதனுடன் இணைத்து வைத்திருப்பர். முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தற்பொழுது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழிலையும் நம்பி யுள்ள மக்கள் தினம்தினம் செத் துக்கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகள் தங்கள் நிலத் திற்கு இழப்பீடு வேண்டும்.வங்கிக்கடனை ரத்துசெய்ய வேண்டும் எனகோரிக்கைகளை வைத்துப் போராடுகின்றனர். இதையும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறார்கள் என்பது வேறு விஷயம்.

அதே நேரத்தில் விவசாயத் தொழிலைத் தவிர வேறு வேலை எதுவும் தெரியாத விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோச மானது. இவர்களின் அன்றாட வயிற்றுப்பாடே கடும் கேள் விக்குறியாகி உள்ளது. விவசா யத் தொழிலாளர்களுக்கு நிவா ரணம் வழங்கி அந்த குடும்பங் களை பாதுகாக்க வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர் சங்கங்கள் போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் தலைமை யில் அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் வெள்ளிக் கிழமை யன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநி லத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அரிமளம் பேரூராட் சியில் சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். .இவர்களில் 90 சதவிகிதத்தினர் விவசாயிகளா கவும், விவசாயத் தொழிலாளர் களாகவுமே இருக்கின்றனர். பல குக்கிராமங்களை உள்ள டக்கிய இந்த பேரூராட்சிக்குள் சேது கண்மாய், கொக்கரத்தான் கண்மாய்,காரியப்பன் கண் மாய், வெங்காரன் கண்மாய், முத்தாண்டிக் கண்மாய், புதுக் கொண்டான் கண்மாய், சொட லைக் கண்மாய் ஆகிய கண் மாய்கள் உள்ளது. இந்த கண் மாய்களுக்கான பாசன நிலங் களும் உள்ளன.

சிற்றூராட்சி மக்களுக்கு உள்ளஅனைத்துப் பாதிப்புக ளும் இந்த மக்களுக்கும் உள் ளது. எனவே, முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த முதல்நிலைப் பேரூராட்சியான அரிமளத்திற் கும் நூறுநாள் வேலைத் திட் டத்தை விரிவுபடுத்த வேண் டும் என்று லாசர் வலியுறுத் தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner