எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 10- சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் உறுதி தன்மையை இழந் ததால் பள்ளம் ஏற்பட்டது என்று மெட்ரோ ரயில் நிறு வன நிர்வாக இயக்குநர் பங் கஜ்குமார் பன்சால் தெரிவித் தார்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக் குநர் பங்கஜ்குமார் பன்சால் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மெட்ரோ ரயிலுக்கு சுரங் கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அண்ணா சாலை பகுதியில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று (ஏப். 9) பிற்பகலில் டனல் போரிங் மெஷின் மூலம் சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்ற போது அண்ணாசாலை சர்ச் பார்க் அருகே மண் உறுதி தன் மையை இழந்ததால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இது அவ்வப்போது நடக்கும் சம்பவம் தான்.

இதனால் பயப்பட வேண் டியது இல்லை. இதுபோல் பள்ளம் ஏற்படாமல் இருப்ப தற்காக பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறோம். அதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசை சார்ந்த சம் பந்தப்பட்ட அனைத்து துறை களும் எங்களுடன் சேர்ந்து பள்ளத்தை சீரமைக்க நட வடிக்கை எடுத்து வருகின்றன. இன்று (10.4.2017) காலை 6 மணிக்கு இந்த பகுதி வழி யாக வாகனங்கள் செல்வதற் கான அனைத்து ஏற்பாடுகளை யும் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.