எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப்.22 அண்ணா நகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார் பில் மூத்த எழுத்தாளர் "இலக் கிய வீதி" இனியவன் அவர் களுடைய "பவழவிழா" தலை வர் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனை வர் சிலம்பொலி செல்லப்பனார்  கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், இனி யவன் அவர்களது இலக்கிய வீதி, பத்திரிகையை தொடங்கி வைத்ததே தான் தான் என்றும் அவர் நடத்திய அனைத்து நிகழ்ச்சிகளிலும் தான் கலந்து கொண்டதை குறிப்பிட்டார். அவரது பல்வேறு பண்புகளை குறித்து சிறப்பாக எடுத்து ரைத்தார்.

தலைவர் பேசுகையில் இனியவன் அவர்கள் தனக்கு முக்கியத்துவம் தராமல் தமி ழுக்கே முக்கியத்துவம் கொடுத் தார். தனக்கென வாழாமல் பிறருக்காக வாழும் தன்மை உடையவர் என்று பெருமைபட கூறினார்.

வாழ்த்துரை வழங்கிய "புதுகைத் தென்றல்" ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் பேசும் போது, இனியவனுக்கும் தனக்கும் உள்ள நீண்டகால நட்பைக் குறித்து குறிப்பிட்டார். இலக்கியவீதி தொடங்கிய போது  அவர் சந்தித்த பிரச்சி னைகள் குறித்து குறிப்பிட்டார். இனியவன் அவர்கள் அமைதி, அடக்கம் முதலிய பண்புகளை குறித்து தெளிவாக எடுத்துரைத் தார்.

முனைவர் மறைமலை இலக்குவனார் தமது வாழ்த் துரையில், இனியவன் - கசலட் சுமி இவர்களின் பவழவிழா, பாண்டியன் சங்கத்தில் கபிலர் தலைமையில், ஓரி பாராட்ட நடைபெறுவதாகக் குறிப் பிட்டார். இனியவன் குறித்து குறிப்பிடுகையில அவர்

9 ஆவது வகுப்பில் படிக்கும் போதே, மாணவர் குரல் நடத் திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இலக் குமிபதி என்னும் பெயர் இனி யவன் என்று மாறியது. பள்ளியிறுதி படிக்கையில் "பெண் மனம்" கதைக்கு முதல் பரிசு. குமுதம், ஆனந்த விகடன் வாசகர்கள் இவரது கதைகளை விரும்பி படித்தனர்.

1959 இல் தொடங்கி 1972 இல் 14 ஆண்டுகளில் 250 சிறு கதைகள், 17 குறும் புதினங்கள், 15 புதினங்கள் பயண நூல்கள் இரண்டு என தனது எழுத்துலக வரலாற்றை விரிவாக்கினார். இவர் நடத்திய கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள பல தமிழ றிஞர்கள் கலந்து கொண்ட தை பெருமையாகக் குறிப்பிட்டார். லேனா தமிழ்வாணனால் சங் கப் பலகை என அழைக்கப் பட்ட இலக்கியவீதியின் ஒளிக் கதிர்கள், டெல்லி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடு களில் பாய்ந்து பரவியது என்று குறிப்பிட்டார்.

கம்பன் கழக செயலாளராக அருளாளர் ஆர்.எம்.வீ அழைத்த போது மனமுவந்து ஏற்று இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் பல பய னுள்ள  செய்திகளை எடுத்துக் கூறினார்.     முன்னதாக செய லாளர் அரிமா துரை சுந்தர ராசன் அனைவரையும் வரவேற் றுப் பேசினார்.வழக்கம்போல, முனை வர் பு.பெ. இராமசாமி அவர்கள் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தினார். பொருளாளர் "காயத்ரி" ரங்கராஜன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner