எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 25- சென்னை புத்தக சங் கமத்தின்  அய்ந்தாம் ஆண்டில் சிறப்புப் புத்தக காட்சியில்  50 விழுக்காடு தள்ளு படியுடன்கூடிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

வாசகப் பார்வையாளர்கள் கரும்பு தின்னக்கூலியா? என்று கேட்டு கருத்துக் கருவூலங்களான அரிய புத்தகங்களை 50 விழுக்காடு தள்ளுபடியுடன் சென் னைப் புத்தகச்சங்கமம் வழங்குகிறதா? சென்றுதான் பார்ப்போமே என்று குடும் பத்துடன் வருகைதந்து, சென்னைப் புத்தகக் காட்சியை நேரில் கண்டு வியந்து போகிறார்கள்.

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வரு கைதருவோருக்கான உணவு அரங்கு களாக வெயிலுக்கேற்ற சத்தான உண வாக கம்பு, கேழ்வரகு கூழ், சிறுவர் களைக் கவரும் சத்தான தின்பண்டங் களாக வேர்க்கடலை உருண்டைகள், கோடை வெயிலுக்கேற்ற  கரும்புச் சாறு, சுவையான காபியிலிருந்து மாலை நேர உணவாக சமோசா, பஜ்ஜி, பானி பூரி உள்ளிட்ட உணவுக்கான அரங்குகள் அனைவரையும் கவருகின்றன.

கோடையில் குளிர்தரு நிழல்

சென்னைப் புத்தகச் சங்கமம்

நடிகவேள் எம்.ஆர்.ராதா அரங்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்டுள்ளதால், கோடையில் குளிர் தரு நிழலாக அமையப்பெற்றுள்ள சென்னைப் புத்த கச் சங்கமத்திள் சிறப்புப் புத்தகக்காட் சியில் பார்வையாளர்கள்.  அனைத்து அரங்குகளையும் சலிப்பின்றி பார் வையிட்டு, தங்களுக்குத் தேவையான புத்தங்களை அள்ளிச்செல்கிறார்கள்.

குடும்பம் குடும்பமாக வாசகர்கள் வருகை தருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புத்தகங்கள் பல்வேறு அரங்குகளில் கொட்டிக்கிடக்கின்றன.

கணினி பயன்பாடுகள் குறித்த விளக்கங்களுடன், தமிழில் கற்பிக்கின்ற அரங்கு, குழந்தைகளுக்கு எளிதாக புரியும்படி கற்பிக்கும் நவீன கருவி களுடன் ஓர் அரங்கு, பகவத் கீதை புத்த கம் ஓர் அரங்கில் என்றால், கீதையின் மறுபக்கம் ஆய்வு நூல் ஓர் அரங்கில் என பலதரப்பட்ட கருத்துகளை உள்ள டக்கிய புத்தகளுக்கான அரங்குகள் சென்னை புத்தக சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பதிப்பகத்தின் அரங்கு, பார்வையாளர்கள் தேடுகின்ற புத்தகம் கிடைக்கும் அரங்கு என கேள்விகளால் சென்னை புத்தகச் சங்கமத்தின் அலு வலகம் துளைத்தெடுக்கப்படுகிறது. வாசக, பார்வையாளர்களின் அனைத்து வித அய்யங்களுக்கும் மிகவும் மென் மையாக, இனிமையாக, சரியான தக வல்களை அளிக்கின்றனர் சென்னை புத்தகச்சங்கமத்தின் அலுவலகத்தில் உள்ள பொறுப்பாளர்கள்.

சென்னை வேப்பேரி ஈ.வெ.கி.சம்பத் சாலையில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம், அவ்வழியே செல்வோருக்கு நினைவூட்டக்கூடிய வண்ணம் பெரி யார்  திடல் முகப்பில் சென்னை புத்த கச் சங்கமத்தின்  வரவேற்பு, விளம்பர வளைவு வெகு நேர்த்தியாக அமைக் கப்பட்டுள்ளது.

சென்னைப் புத்தகச் சங்கமத்தின் வெற்றிக்கான பங்களிப்புகள்

சென்னைப்புத்தகச் சங்கமத்தின் அய்ந்தாம் ஆண்டில் சிறப்புப் புத்தகக் காட்சியின் வெற்றியில் பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம்,  விடு தலை நாளிதழ், வானொலித் தொடர்பில் ஹலோ பண்பலை ஒலிபரப்பு, சமூக ஊடகங்களுக்கான பங்களிப்பில் பரம்பிரிதி, அழகுற விளம்பரப்படுத்தும் ஓசான், செயல்பாடுகளில் பங்களிப்பாக 4சீகார்ட், அரங்குகளுக்கான பங்களிப்பா ளர்களாக சந்திரா பர்னிச்சர் வாடகை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தரப் பிரின் பங்களிப்பு பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு, நேர்த்தியாக மக் களை தகவல்கள் சென்றடைகின்றன.

அருகமை தொடர் வண்டி நிலையத் தில் பயணிகளாக வருவோர் போவோர் என அனைவரிடத்திலும் சென்னைப் புத்தகச் சங்கமம் குறித்தே பேச்சு. புத்த கங்களை வாங்கிச்செல்வோரே தொடர் வண்டி நிலையத்தில் சென்னைப் புத்த கச் சங்கமத்தின் விளம்பர முகவர்களாக மாறிய காட்சியைக்காண முடிந் தது.

தந்தை பெரியார் என்றால், சமுதா யத்தில் மக்களிடையே உள்ள அறி யாமை இருளைப் போக்கியவர். சுயமரி யாதை உணர்வை தட்டி எழுப்பியவர். அவருடைய பெயரில் உள்ள பெரியார் திடலில் அறிவுப்பெட்டகங்களாக, கருத்துக்  கருவூலங்களாக புத்தகங்கள் கிடைக்கின்றன என்பது அதிசயமல்ல. ஆனால், 50 விழுக்காடு தள்ளுபடியுடன், கருத்து பேதமில்லாமல் அனைத்து கருத் துகளுக்கும் இடமுண்டு, அனைத்து பதிப்பகத்தாருக்கும் இடமுண்டு என் றால் அது சென்னைப் புத்தகச் சங்கமத் தின் சிறப்புப் புத்தகக் காட்சிதான் என்றால் மிகையில்லை.

கருத்துக்கு விருந்தாக முதல்நாளில் புத்தகர் விருது விழா, நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை மற்றும் அடுத்தடுத்த நாள்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் என களை கட்டிவருகிறது சென்னைப் புத்தகச் சங்கமம்.

வார நாள்களைப்போன்றே விடு முறை நாள்களிலும் வாசகர்கள், பார் வையாளர்கள் குடும்பத்துடன், நண்பர்க ளுடன் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளார்கள்.

சென்னைப்புத்தகச்சங்கமத்தின் சிறப்புப் புத்தகக்காட்சி அய்ந்து நாள் கள் போதாது என்று எண்ணும் அள வுக்கு, சென்னை மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்தும் வாசகர்கள், பார்வையாளர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல், வாசிப்பை சுவாசிப்பாக கொண்டுள்ளவர்கள் திரண்டவண்ணம் இருக்கிறார்கள். சென்னைப் புத்தகச்சங்க மத்தின சிறப்புக் புத்தகக்காட்சி அறி வின் திறவுகோலாக கற்றோரால் போற் றப்படுகிறது என்றால் மிகையில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner