எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2 சதவிகிதம் பேருக்காக 98 சதவிகிதம் பேர்மீது

இந்தி மொழியையும், ‘நீட்’ தேர்வையும் திணிக்கும் மோடி அரசு

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் குற்றச்சாட்டு

சென்னை, மே 6 -மோடி அரசு தமிழ கத்தை அடிமை மாநிலம் போல நடத் துவதாகவும், வெறும் 2 சதவிகிதம் பேருக்காக, 98 சதவிகிதம் பேர்மீது இந்தி மொழியையும், நீட் தேர்வையும் திணிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத் துக் கட்சி ஆதரவோடு நிறைவேற்றி அனுப்பியுள்ள மருத்துவச் சேர்க்கை சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக குடியரசுத்தலைவர்ஒப்புதலைமத் திய அரசு பெற்றுத்தரக்கோரி கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்ட மைப்பின் சார்பில் வெள்ளியன்று (மே 5) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடர்முழக்கப் போராட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பேராசிரியர் ந.மணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழக மக்களின் உரிமைக்கு, மாநில உரிமைக்கு வைக்கப்பட்ட வேட்டுதான் நீட் தேர்வு. தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுதச் சொல்வது, அவர்கள்மீது நடத்தப்படும் வன்முறை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 31.1.2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக சட்டப்பேரவையில்அனைத்துக் கட்சி களும் சேர்ந்து நீட் வேண்டாம் என்று சட்டம் கொண்டு வந்தனர். அது கொண்டு வரப்பட்டு 100 நாட்களாகி விட்டது.

ஆனால், மத்திய அரசு அது பற்றிக் கவலைப்படாமல் உள்ளது. இத னால்தான் தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இது மாநில உரிமை சம்பந்தமான பிரச்சினை. அடிமை போல தமிழகத்தை மத்திய அரசு நினைப்பதாக நான் கருதுகிறேன். கூட்டாட்சி தத்துவம் தூக்கி எறியப் பட்டுள்ளது.சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் உள்ளது. இந்தித் திணிப்பு போல நீட்டையும் திணிக்கிறார்கள்.

நீட் தேர்வு என்பது சிபி எஸ்இ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தில் 98 சதவிகிதம் பேர் மாநிலத் திட்டத்தின்கீழ் படிக் கிறார்கள். வெறும் 2 சதவிகிதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத் திட்டத் தின்கீழ் படிப்பவர்கள். இரண்டுமே வேறு வேறு பாடத் திட்டங்கள். அப்படியிருக்க வெறும் 2 சதவிகிதம் பேருக்காக 98 சதவிகிதம் பேரை மாறச் சொல்கிறார்கள்.1984 முதல் 2006 வரை தமிழ்ப் பாடத்திட்டத்தின் கீழ்தான் நுழைவுத் தேர்வு நடந்துவந்தது. சிபி எஸ்இ மாணவர்கள் இதில் போட்டி போட முடியவில்லை.

எனவே, 10-ஆவது படித்து விட்டு பிளஸ்1 மாநிலத் திட்டத்துக்கு மாறுவார்கள். ஆனால், 2 சதவிகித மாணவர்கள் மாறுவது என்பதுவேறு, 98 சதவிகித மாண வர்கள் மாறுவது என்பது வேறு.98 சதவிகிதம் பேரை மாறச் சொல்வது அராஜகம், வன்முறை. தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் கூட்டாட்சித் தத்துவம் என்பதே கேள்விக்குறியாகி விடும். வாடிவாசல், நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் போல போராடிக் கொண்டே இருக்க முடியாது. நேரு பிரதமராக இருந்திருந்தால், அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை இருந்திருக்காது.

தமிழகத்தின் 7 கோடி மக்களையும் மத்திய அரசு அவமதிக்கிறது. சட் டத்தை ஏற்க வேண்டும் அல்லது நிராகரிக்கவேண்டும் திராணி இருந்தால் நிராகரிக்கட்டும். அப்படி செய்யாமல், அய்யாக்கண்ணு போராடியது போல நீ போராடு, நான் எதுவுமே செய்ய மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழக மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசின் செயல்பாட்டில் நியாயம் இல்லை.

நீட்டைத் துரத்தும் வரை இந்தப் போராட்டம் தொடரத்தான் செய்யும்.

இவ்வாறு அரிபரந்தாமன் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமு வேல்ராஜ், திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், பேராசி ரியர் சுப. வீரபாண்டியன், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்தி ரபாபு, கு.செல்வப்பெருந்தகை (இந்திய தேசிய காங்கிரஸ்), எஸ்.எஸ். பாலாஜி (விசிக), ரோகிணி (திரைக்கலைஞர்), ஜி.ஆர். இரவீந்திரநாத் (சமூக சமத்துவத் துக்கான டாக்டர்கள் சங்கம்), எஸ்.காசி (மக்கள் நல்வாழ்வு க்கான மருத்துவர்கள் சங்கம்), நா.எழிலன் (நிறுவனர் இளை ஞர் இயக்கம்), விடுதலை விரும்பி (தமிழ்நாடு மருத்து வர்கள் சங்கம்), தாமு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பி னர் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்.

மத்திய அரசின் சுகாதாரத்துறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாவில் 2016-  -2017ஆம் ஆண்டில் நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களித்த போது, மாநில பாடத் திட்டமும் நீட் பாடத்திட்டமும் வெவ் வேறானது என்பதுதான் பிரதான கார ணமாக கூறப்பட்டது:

தற்போதும் அதே வேறுபாடு தான் நிலவுகிறது; கடந்தாண்டு 11- ஆம் வகுப்பு படித்தவர்களே இந்தாண்டு 12-ஆம் வகுப்பு படிக்கிறார்கள்; இரண்டுக்கும் வெவ்வேறு பாடங்கள் தனித்தனி வகுப்புகள் இல்லை; எனவே, மத்திய அரசு சென்ற ஆண்டு நீட் விலக்கு அளித்த சட்டமே இந்த ஆண்டுக்கும் பொருந்தும் என்று அவர்கள் தெரிவித் தனர். நீட் தேர்வு இந்தியாவில் பின் பற்றப்பட்டு வரும் பள்ளிக் கல்வி முறையை கேள்விக்கு உட்படுத்துகிறது. தனியார் நீட் பயிற்சி மய்யங்களை உருவாக்குகிறது. எந்த வகை பள்ளி முறையில் படித்திருந்தாலும் தனிப் பயிற்சிமய்யங்களில்பணத்தைசெல வழிக்காமல்மருத்துவக்கல்விபயில முடியாது என்ற நிலை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

உலக மயமாக்கலின் விளைவாக உலகம் முழுவதும் சென்று வெவ்வேறு நாடுகளில் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமில்லை; பணம் தவிரவேறு எந்த தகுதியும் தேவையில்லை எனக் கூறும்போது ஏழை,எளிய தாழ்த்தப்பட்டபிற்படுத்தப்பட்டமாண வர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமல்செய்யும்நீட்தேர்வுஅரசி யல்சாசனத்தின் சமத்துவ கோட்பாட்டிற்கு விரோதமானதாகும். கற்பதற்கான சம வாய்ப்பு இல்லாத தேசத்தில் சமமான போட்டித் தேர்வுகள் நடத்துவது மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழகத்தில்பின்பற்றப்படும்மருத் துவ சேர்க்கை முறை, முறைகேடு இல்லாமலும், வெளிப்படைத் தன்மை யோடும், தகுதி அடிப்படையிலும் நடை பெறுகிறது. இதற்கு மாற்றான மோசமான ஒரு முறை தேவையற்றது. எனவே, தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப் புதலை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு நலவாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் போராட்டைத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner