எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், மே 7 நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

வேலூரில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று (6.5.2017) இந்தி திணிப்பு, நீட் தேர்வை கண்டித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு தலைமை வகித்து தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்க்கிறோம். தாய் மொழியான தமிழுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற் காகத் தான் இந்தக் கருத்தரங்கம் நடத்தப் படுகிறது.

இந்தி மொழியை ஆதிக்கம் செலுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால், தமிழ் மொழி தரம் தாழ்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தி மொழியை விரும்பிப் படிப்பவர்களை எதிர்க்க வில்லை.

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக் கவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

முந்தைய காங்கிரஸ் அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தரப்பட்டது.

1965-ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தான் தமிழகத்தில் 1967-இல் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.

நீட் தேர்வு, மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிமன்றம் கருதியபோதிலும், ஆட்சியாளர்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுடில்லி யில் பிரதமர் மோடியை சந்தித்த போது இதுகுறித்து வலியுறுத்தவில்லை.

அண்மையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி தீர்மானம் போடாதது ஏன்?.

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வரு கின்றன. ஊழல், வருமானவரித் துறையின் பிடியில் சிக்கியுள்ளதே இதற்கு

காரணம்.

ஜல்லிக்கட்டுக்காக ஒருங்கிணைந்து வெற்றி கண்டதைப் போல, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தி திணிப்பு, நீட் தேர்வு விவகாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

இந்தி திணிப்பை எதிர்த்து மாநிலங் களவை எம்.பி. திருச்சி சிவாவும், நீட் தேர்வை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவும் பேசினர். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதி லளித்தனர்.

நிகழ்ச்சிக்கு, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் வரவேற் றார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்எல்ஏ-க்கள் ஆர்.காந்தி, ப.கார்த்திகேயன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.