எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மே 28- மாட்டு இறைச் சிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்து இருந்தது. இந்த தடைக்கு பல்வேறு மாநிலங் களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அது போல் மாட்டு இறைச்சி தடைக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி யும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாட்டு இறைச் சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு ரோட்டில் வெட்டும் போராட் டத்தை நேற்று நடத்தினர். மூலக்குளம் 4 முனை சந்திப் பில் நடந்த இந்த போராட்டத் துக்கு விடுதலை கட்சியின் தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை தாங்கினார். தமி ழகம்- புதுவை மாநில துணை பொது செயலாளர் பாவாணன், நிர்வாகிகள் அன்பரசன், சாந்த குமார், முபாரக், கபிலன், பஷீர் அகமது, இன்பதமிழன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட் டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து முழங்கினர். பின்னர் திடீர் சாலை மறிய லிலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து சாலை மறிய லில் ஈடுபட்ட விடுதலை சிறுத் தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.