எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 29- சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணி கள் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெற்று வரு கின்றன.

இதில் கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா முதல் பரங்கிமலை ஒரு வழித்தடத்திலும் சைதாப் பேட்டை சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை மற்றொரு வழித்தடத்தி லும் மெட்ரோ ரயில்கள் ஓடு கின்றன.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் பூமிக்கடியில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. புது வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயில் என 2 அடுக்குகளாக பூமிக்கு அடியில் நவீனமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

தரையில் இருந்து கீழே 10ஆ-வது மீட்டரில் பயணச் சீட்டு நிலையமும், 17-ஆவது மீட்டரில் முதல் வழித் தடத்துக் கான ரெயில் பாதையும், 21ஆ-வது மீட்டரில் 2ஆ-வது வழித் தடத்துக்கான பாதையும் அமைக் கப்பட்டுள்ளன.

இந்த ரயில் நிலையம் 388 மீட்டர் நீளமும், 333 மீட்டர் அகலமும் கொண்டு 70 ஆயிரம் சதுர அடியில் மாபெரும் அள வில் அமைக்கப்பட்டு வரு கிறது.

இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், பூங்கா நகர் பறக்கும் ரயில் நிலையம், பூங்கா நகர் ரயில் நிலையம் ஆகிய 4 முக்கிய ரயில் நிலையங்களுக்கு இணைப்பு வழியாக 4 சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படு கின்றன.

இதில் பூங்கா நகர் ரயில் நிலையம் - சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகம் இடையிலான சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் முடிவ டைந்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு தற்போது திறக்கப் பட்டுள்ளன.

மேலும் சென்னை மெட்ரோ ரயில் கழகம் மூலம் சுமார் ரூ.400 கோடி செலவில் ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொது மக்கள் கூடும், புறநகர் ரெயில் நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை ரயில்வே தலைமை அலுவலக கட்டிடம், சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு பொது மருத்து வமனை, பூங்காநகர் ரயில் நிலையம் மற்றும் ராமசாமி முதலியார் சத்திரம் ஆகியவற் றுக்கு அருகே உள்ள பகுதிகள் உலகத்தரத்தில் மேம்படுத்தப் பட்டு சென்ட்ரல் சதுக்கமாக அமைக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் சதுக்கத்தில் பயணிகளுக்கான வசதிகள், கீழ்தளத்தில் வாகன நிறுத்தும் வசதி, பாத சாரிகளுக் கான நடைபாதை, தரைதள வாகன நிறுத்தும் வசதி ஆகி யவற்றை கொண்ட ஒருங் கிணைக்கப்பட்ட பல தரப் பட்ட போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner