எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 10- விவசாயிகளைக் காப்பாற்றத் தவறிய பிஜேபி அரசு மாடுகளைக் காப்பாற்றப் போவதாகச் சொல்லு வதுதான் வேடிக்கை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன்.

30.5.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மாட்டுக்கறி உணவை தடை செய்யும் மத்திய பா.ஜ.க. மதவாத அரசைக் கண்டித்து’’ மாபெரும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அவசியமாகக் கூட்டப்படவேண்டிய கூட்டம்

அவசரமாகக் கூட்டப்பட்ட கூட்டம் என்று கவிஞர் பூங்குன்றன் அவர்கள் தன்னுடைய வரவேற்புரையில் கூறினார். இது அவசியமாகக் கூட்டப்படவேண்டிய கூட்டம் ஆதலால், அவசரமாகக் கூட்டப்பட்டு இருக்கிறது.

நாம் கூடியிருக்கின்ற இந்த மன்றம் 1920 ஆம் ஆண்டு காலத்திலிருந்தே இந்த ஆதிக்க வகுப்பு வெறியை ஒழிப்ப தற்காக அது தொடர்ந்த போராட்டம், இப்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது. முந்தா நாள் வரையில் தெரியா தவர்கள்கூட இன்று தெரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைக்கு தமிழகத்தில்

ஒரே மேடையிலிருந்து பேசியிருக்கிறார்கள்

எனக்கு முன்னர் பேசிய, சகோதரக் கட்சியினுடைய பிரதிநிதிகளாகப் பேசிய தோழர்கள் அத்துணை பேருமே, மிக அருமையான கருத்துகளை தெளிவாக இங்கே குறிப் பிட்டிருக்கிறார்கள். காலங்கருதி நான் அவைகளை மீண்டும் குறிப்பிட விரும்பவில்லை. அனைவருமே இன்றைக்கு ஒரு மித்த கருத்தை பல மேடைகளில் இருந்து பேசுவதை, இன் றைக்கு தமிழகத்தில் ஒரே மேடையிலிருந்து பேசியிருக் கிறார்கள். என்னுடைய அருமை நண்பர் பலராமன் உள்பட.

பலராமன் உள்பட என்று நான் சொல்லியதற்குக் காரணம், நேற்றுதான் காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் கேரளத் தில், குறிப்பாக இளைஞர் காங்கிரசு கட்சியின், நாங்கள் அப் படித்தான் சாப்பிடுவோம் என்பதற்காக, பகிரங்கமாக, காளைக் கன்றை ஒன்றை வெட்டி சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். காவல்துறையினரையும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, அவர்களுடைய கட்சியின் தலைவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பலராமன்மீதும் நடவடிக்கை வராது என்று நான் நம்பு கிறேன். எனவே, உறுதிமொழி கொடுத்ததற்காக அவருக்கு நன்றி.

கேரள முதலமைச்சரின் துணிவு

அண்டை மாநிலமான கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், எடுத்த எடுப்பிலேயே அத் துணை மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியதோடு, அவர் உடனடியாகவே, எங்களுடைய மாநிலத்தில் இது நிறைவேறாது. எங்களுடைய மாநில உரிமையில் தலையிட நான் அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

மறைந்த அம்மையாரின் துணிவில் நூற்றில் ஒரு பங்கு இருக்கவேண்டாமா?

இந்தப் பக்கத்தில் இருக்கிற குட்டி மாநிலமான, இவரது கட்சியைச் சார்ந்தவர்தான், என் அருமை சகோதரர் நாராயண சாமி அவர்கள். அவரும் துணிச்சலாக சொல்லியிருக்கிறார். எங்கள் மாநிலத்தில் இது நடைபெறாது என்று. ஏனென்றால், அது நீண்ட காலமாகவே, பிரெஞ்சு நாட்டினுடைய நேரடித் தளமாகவே இருந்தது. ஆனால், நாம் பேசிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டைச் சார்ந்த ஆட்சியாளர்கள், என் நண்பர்கள். இந்த அறிவிப்பைப்பற்றி இனிமேல்தான் படிக்கப் போகிறார் களாம். பிறகு அதனை ஆய்வு செய்த பிறகு சொல்வாராம். பொறுப்புள்ள என்னுடைய அருமை நண்பர், அவருடைய பெயரைச் சொல்ல நான் விரும்பவில்லை. வெட்கப்படுகிறேன். எங்களுக்குக்கூட துரோகம் செய்யுங்கள் - உங்களை மனிதர் களாக ஆக்கி, இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப் படுத்தி, ஆட்சியில் அமர வைத்தாரே, அந்த அம்மையாருக்கு இருந்த துணிவில், நூற்றில் ஒரு பங்கு இருக்கவேண்டாமா?

இன்றைக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கே பிரகட னப்படுத்தாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தரை நியமிப்பதற்கு ஆளுநர் நேர்முகக் காணல் நடத்துகிறாராம்; மந்திரி பக்கத்தில் இருந்து பைலைத் தூக்கிக் காட்டுகிறாராம்.

கோப்புத் தூக்கிக் காட்ட என்று பிறந்தீர்கள்? சேலை கட் டிய ஒரு பெண் மகள் இருந்திருக்கிறாள். வேட்டிக் கட்டியவர் களாக நீங்கள் வெட்டிக்கு வந்திருக்கிறீர்கள். வெட்கப்படுகி றேன்.

நாளையாவது அறிவிப்பீர்கள்

என்று நம்புகிறேன்

தமிழ்நாட்டின் சார்பில் உடனடியாக அறிவித்திருக்க வேண்டாமா? அறிவிக்கவில்லை. நாளையாவது அறிவிப் பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், நேற்றிலிருந்து அதனை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அத னைப் படித்திருக்கிறார்.

வள்ளுவர் காலத்திலிருந்து இந்த உலகத்திற்குக் கற்பித்த வர்கள் நாம்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

அந்தத் திருக்குறளைப் படிக்காதே என்று சொன்னவர் தான் காஞ்சி பெரியவாள்.

இந்தக் குறட்பாவைப் படிக்கக் கூடாது என்று சொன்னார். ஏன்?

மழித்தலும், நீட்டலும் வேண்டாவாம் உலகு

பழித்தது அழித்தபடி நின்றான்

அறத்தார் இதுவன வேண்டாம் சிவிலி

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

என்று அடித்தான்.

எனவே, வள்ளுவனுக்கே இவர்கள் எதிரிகள். பிறகு நமக்கு நண்பர்களாகவா இருப்பார்கள்?

இந்தியா  மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்க எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்?

எனவே, நம்முடைய பாரம்பரியத்திற்கு அவர்கள் முதல் எதிரிகள். தந்தை பெரியார் அவர்களும், இந்திய அரசியல் சட்டத்தை இந்த நாட்டிற்காக, நமக்காக வாக்குரிமை கொடுத்து எழுதிய டாக்டர் அம்பேத்கர் அவர்களும், எவ்வளவு சிரமப் பட்டிருந்தால், இந்த சதிகார கும்பலைத் தாண்டி, இந்த நாட்டை, ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்திருப்பார்கள் என்பதை, அதுவும் அவர்கள் கட்சியிலே கை தூக்க ஆளில்லை. முன்மொழிந்தால், வழிமொழிய ஆளில்லை. தன்னுடைய அறிவுத் திறனால், அத்துணைப் பயல்களுக்கும் தண்ணீர் காட்டினார் டாக்டர் அம்பேத்கர்.

எனவேதான், மனுஸ்மிருதியிலேயே அவன் மொழி பெயர்த்துப் போடாததை, இவர் மொழி பெயர்த்து, அப்பா, நீங்களும் படித்துக்கொண்டு, உங்கள் ஆள் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.

இவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலம்கருதி, சுருக்க மாக ஒவ்வொன்றாக நான் சொல்கிறேன்.

கவுதம புத்தர் அவர்கள்தான் முதன்முதலாக இவர்களு டைய அடிப்படை தத்துவத்தை எதிர்த்துப் போராட்டத்தைத் தொடங்கினார்.

கொல்லாதே என்று சொன்னது வெறும் அனுதாபத்தால் மட்டும் அல்ல; இவன் அடிக்கின்ற கொள்ளையைத் தடுப்பதற் காக. மரபுப்படி, சாத்திரப்படி ஒரு பசு மாடு முதலில் ஒரு கன்றைப் போட்டால், அந்த முதல் கன்றை கோவிலுக்குக் கொடுத்துவிடவேண்டும். கோவிலுக்கு என்றால், சாமிக்கா? அது இன்றைய வரையில் எந்தப் பொங்கலையும் வாய் திறந்து சாப்பிட்டதில்லை. வைத்துக் காட்டுவான், காட்டிய பிறகு இவன் சாப்பிடுவான்.

நான் மட்டுமா?

கண்ணனே அப்படித்தான் என்பான்

இவனுடைய ஆயுட்காலத்தில், எவனாவது ஒருவன் ஒரு மாட்டிற்காவது ஒரு கைப்பிடி புல்லையாவது போட்டிருப் பானா? நமக்குப் பழகிப் போய்விட்டது - அடிமைகளாக இருந்தே நம்முடைய மக்களில் பெரும்பான்மையான மக்க ளுக்கு. பிறப்பதே நாம் அதற்குத்தான் என்று இருக்கிறார்கள், இப்பொழுதும்.

எனவே, மாட்டைக் குளிப்பாட்டி, அதற்குப் புல் போட்டு, பாலைக் கறந்து, அந்தப் பாலை பக்குவமாக உறையூற்றி, கடைந்து, வெண்ணெய் எடுத்த பிறகு, மேற்படியான் வந்து விடுவான், விழுங்குவதற்கு.

அந்த வெண்ணையை விழுங்குவதற்கும் ஒரு கதையைச் சொல்லுவான். நான் மட்டுமா? கண்ணனே அப்படித்தான் என்பான்.

எனவே, நாம் தயாரித்துக் கொடுத்த வெண்ணெய்யை தின்று கொழுத்தவர்களுக்கு, இப்பொழுது நாக்கொழுப்பேறி, ஆட்சி பீடத்திலும் இருப்பதால், நம் விரலை வைத்தே, நம் கண்களைக் குத்தப் பார்க்கிறார்கள். நாம் அதற்கு இடங் கொடுக்கக்கூடாது. இவன் பசுமாட்டிற்கு அனுதாபம் உள்ள வன் அல்ல. இவன் ஆரம்ப காலத்திலிருந்தே எப்பொழுதுமே, தோளிலே கைபோட்டுத்தான், நம் பைக்குள்ளே கையை விடுவான். அதில் நம்மை பிளவு செய்வது, நம்மை மோத விட்டுவிட்டு, கடைசியில் அவன் வெற்றி விழா கொண்டாடு வான். இது அன்றிலிருந்து தொடர்ந்து நடப்பதுதான்.

ஆட்சிப் பொறுப்பேற்ற

மறு வாரமே நீக்கினார்கள்

இவன் ஆட்சி பீடம் ஏறியவுடன் முதல் பலி, கவுதம புத்த ருக்குப் பின், அவருடைய கொள்கைகளை ஏற்ற, அசோக சக்ரவர்த்தியால், நாலந்தா பல்கலைக் கழகம் கட்டப்பட்டது. அந்தப் பல்கலைக் கழகம் கட்டப்பட்டதற்கும், இவனுக்கும் சம்பந்தமே இல்லை. 10, 12 ஆண்டுகளாக, உலகப் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர், இந்திய நாட்டிற்கு நோபல் பரிசைப் பெற்றுக்கொடுத்த - அதனுடைய கவுரவத்தை உயர்த்திய டாக்டர் அமர்த்தியாசென், உலக நாடுகள் முற்றிலும் சுழன்று நிதி வசூலித்தார். குறிப்பாக அதற்கு சிங்கப்பூர் கொடுத்திருக் கின்ற நிதி அதிகம். சீன நாடு கொடுத்திருக்கின்ற நிதி அதிகம். இந்தியா கொடுத்த நிதி குறைவு. அமர்த்தியாசென் அவ்வளவு பேரிடமும் நிதி வசூல் செய்தார்; போப்பாண்டவரும் அதற் காக நிதி கொடுத்தார்.

அந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராக அமர்த்தியா சென் பொறுப்பேற்று, அந்தப் பல்கலைக் கழகத்தி னுடைய பாடத் திட்டத்தில், முழுக்க முழுக்க கவுதம புத்தர் எப்படி முதன்முதலாக காசிக்கு அருகில் தன்னுடைய சங் கத்தை அமைத்து, பல்கலைக் கழகத்தைத் தொடங் கினாரோ, அதேபோல, நாலந்தா பல்கலைக் கழகத்திற்கும் கொடுக்கப் பட்டது. வரலாற்றில் பெரிய ஆய்வு இருக்கிறது. நேரம் கருதி நான் அதனுள் போக விரும்பவில்லை.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று சொல்லப்படுகின்ற ஒரு குண்டர் நியமனம்

சீன யாத்திரிகர்களும் அங்கே வந்திருக்கிறார்கள்; வேறு பலரும் வந்திருக்கிறார்கள். ஜபருல்லாகான் அதுபற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். உலகப் பெரும் பல்கலைக் கழகமாக திகழ்ந்த அந்தப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற அமர்த் தியாசென்னை, மோடி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற மறு வாரமே நீக்கினார்.

அந்த இடத்திற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்று சொல்லப்படுகின்ற ஒரு குண்டர், அந்தப் பல்கலைக் கழகத் தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் பொறுப்பேற்றவுடன், ஏற்கெனவே இருந்த பாடத் திட்டங் களை தள்ளிவிட்டு, முதல் பாடமாக சமஸ்கிருதத்தை வைத் துள்ளார்; இரண்டாவது பாடமாக ஜோதிடம்; மூன்றாவதாக வேத கணிதம். அந்தக் காலத்தில் இருந்ததாம், கணிதம்.

இஸ்ரோவுக்கு இயக்குநராக அவரை நியமியுங்கள் - நீங்கள் அனுப்புகிற கலம் மேலே போகிறதா? அல்லது உங்கள் பக்கம் பாய்கிறதா? என்பதைப் பார்ப்போம்.

சண்டாளர்களை நாடாள விட்டிருக்கிறோம்; நாம் அத் துணை பேரும் அதற்குப் பலி கொடுக்கப் போகிறோம். என் அருமைத் தோழர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சொன்னார்கள், ஜனநாயக முறையிலேதான் வெற்றி பெற்று - பிறகு அந்த அதிகாரத்தை சர்வாதிகாரமாக மாற்றிக் கொள்வார்.

1936 ஆம் ஆண்டில் தொடங்கி, 1939 ஆம் ஆண்டில் உலகத்தையே தீப்பிடிக்க வைத்தான் ஹிட்லர். அவன் மட்டுமா? முசோலினி செய்தான்; பிராங்கோ செய்தான். உலகில் பலரும் செய்தார்கள். ஏமாந்தால், எல்லோருடைய தொடையிலும், ஏன் தொடையையே கயிறாகத் திரிப்பான். எனவே, நாம் இப்பொழுது விழிப்புற்றாக வேண்டும்.

கடவுள் நமக்காக குடிசைக் கூட கட்டவில்லை. எனவே, மாட்டை வளருங்கள்

நாலந்தா பல்கலைக் கழகத்தை நொறுக்கி,  ஆர்.எஸ்.எஸ். ஆளை இப்போது துணைவேந்தராகப் போட்டிருப்பதைப் போல, இந்தியாவில் முதன்முதலாக இந்த வெண்மைப் புரட்சி என்று சொல்கிறோம் அல்லவா! இதை முதன்முதலாக மோடி குஜராத் முதலமைச்சராக வருவதற்கு முன்பு, குஜராத்தில் தொடங்கி வைத்தவர் டாக்டர் குரியன். நமது அண்டை மாநிலத்தில் பிறந்தவர். அவருக்கு இருந்த பெரிய தகுதி என்பது நம்மைப் பொறுத்தவரையில் அவர் பகுத்தறிவாளர். அவர் பகுத்தறிவாளர் என்பதை பகிரங்கமாகவே அறிவிப்பார் ஒவ்வொரு கூட்டத்திலும். நான் மனிதன், சிந்திப்ப வன். எனக்கு ஒன்று மட்டும் தெரியும், மனிதன்தான் கோவில் கட்டி, அதில் ஒரு சிலை வைத்து, கடவுள் என்று பெயர் வைத்தவன். கடவுள் நமக்காக குடிசைக் கூட கட்டவில்லை. எனவே, மாட்டை வளருங்கள் என்று சொன்னார். உடனே அவரை நீக்கிவிட்டார்கள்.

அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார்கள்

30 ஆண்டுகளாக அம்பாசிடர் கார் ஒன்றை வைத்திருந் தாராம்; அவரே துடைத்து, அவரே அந்தக் காரை கழுவுவா ராம். அவ்வளவு சிக்கனமான ஒரு காந்தியவாதி, அமுல் அந்த இயக்கத்தைத் தொடங்கி, அந்த மாநிலத்தை மட்டுமல்ல, இந்தியாவையே உயர்த்தி - உலக அரங்கில் ஒரு பெரிய நிறு வனமாக செய்து காட்டியவரை, அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். மாலை 6 மணிக்குச் சொல்லி, இரவு 8 மணிக்குள் வீட்டை காலி செய்யச் சொன்னார்கள். ஆனால், இந்த நாட்டில் இருந்த மக்கள் அதனைக் கண்டிக்கவில்லை; நாமும் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை.

இப்பொழுது கடைசியாக இவர்கள் எங்கெங்கோ சென்று, கடைசியில் நம் அனைவருடைய அடிப்படை சுதந்திரத்தில், எதைச் சாப்பிடவேண்டும் - சாப்பிடக்கூடாது என்று சொல் லத் தொடங்கியிருக்கிறார்கள். இவனுக்குக் கருணை இருக்கு மானால், பசு வதை என்று சொல்கிறார்களே, யார் அதை எப்பொழுது வதைத்தார்கள்?  இவன் அதை எப்பொழுது தடுத்தான்?

எருமை மாட்டை அப்படி செய்யலாமா?

சரி, பசு வதை செய்யக்கூடாது, அதனுடைய கறியை சாப் பிடுவது பாவம், விற்கக்கூடாது என்கிறீர்கள் சரி, அப்படியா னால், எருமை மாட்டை அப்படி செய்யலாமா?

உயிருள்ளது என்று சொன்னால், அனைத்தையும் சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி சொல்லவில்லை, பசுவை மட்டும் சொல்கிறார்கள்.

காரணம், இவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதன்முதலாக ஒரு பிரகடனம் செய்தார், உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? சென்னையில் உள்ள கல்லூரி மைதானத்தில்தான் தேர்தல் பிரச்சாரம் செய்தார்; திருச்சியிலும் ஒரு கல்லூரி மைதானத் தில்தான் அவர் பிரச்சாரம் செய்தார். அந்தக் கல்லூரி யாரு டையது என்கிற பிரச்சினைக்கு நான் போகவிரும்பவில்லை.

அந்தக் கூட்டங்களில் அவர் முதன்முதலாக சொன்னார், அண்டை நாடுகளுடன் நட்பு வேண்டும். எங்கோ இருக்கிற நாடுகளை எதையோ நினைத்து நட்பு வைக்கக்கூடாது என்று சொல்லி, பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், இஸ்லாமிய நண்பர்களுக்குக் கை கொடுத்தாகச் சொன்னவர், திடீரென்று ஒரு இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இவர் வளர்த்த நட்பு, மருத்துவ கூர்மையோடு அங்கே இருக்கிற ஒரு முகாமை அழித்துவிட்டோம் என்று சொன்னார். சர்ஜிகல் ஆபரேசன் என்று அதற்குப் பெயரும் சொன்னார்கள்.

1500 கிராமங்களிலுள்ள மக்களை இடம்பெயரச் செய்திருக்கிறார்கள்

அதன் விளைவு என்ன தெரியுமா? நான் பஞ்சாபிலிருந்து வந்தவர்களிடமும் கேட்டேன்; எங்களுடைய கட்சியின் செய லாளரிடமும் கேட்டேன். அங்கே என்ன நடந்தது? என்று. பாகிஸ்தான் - இந்திய எல்லையிலிருந்து 1500 கிராமங்களி லுள்ள மக்கள் அனைவரும் இடம்பெயரச் செய்திருக்கிறார்கள். அங்கே நாய்கள் மட்டும்தான் திரிகின்றன. மோடி சொல்லி வராத ஒன்று நாய் மட்டும்தான்.

அதற்கு என்ன காரணம்? அங்கே நாள்தோறும் பயங்கர வாதிகள் தாக்குகிறார்கள். கடந்த மூன்றாண்டுகளில் கணக் கிட்டால், அதற்கு முன்பு 10 ஆண்டுகளில் இந்திய - காஷ்மீர் எல்லையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில், நாமும் தாக்குவதுண்டு, அவர்களும் தாக்குவதுண்டு. கணக்கை முழு மையாக வெளியில் விடமாட்டார்கள். ஆனால், உண்மையான விவரப்படி பார்த்தால், இந்த மூன்றாண்டுகளில் ஏழு மடங்கு இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, தலைகள் சீவப்பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். மேலும் ஒரு முகாமை அடையாளம் தெரியாமல் அழித்து விட்டோம் என்று.

அங்கே உள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி சொல்கிறார், நாங்கள் பத்திரமாக இருக்கிறோம்; எவருமே வரவில்லையே என்று.

மோடிக்கு சேவை செய்கிற ஊதுகுழல்களாக தொலைக்காட்சி நிறுவனங்கள்!

இதை ஏன் சொல்கிறேன் என்றால், இவர் சொல்கிற கதைகளையெல்லாம் சொல்வதற்கு என்றே, இப்பொழுது இந்தியாவிலுள்ள, மன்னிக்கவேண்டும் வந்திருப்பவர்களைச் சொல்லவில்லை - இவர்கள் எல்லாம் செய்தி சேகரிக்க வந்திருப்பவர்கள். ஆனால், இவர்களை வைத்து தொழில் நடத்துபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா - தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்கள் - அவர்கள் அவ்வளவு பேருமே, அந்தத் தொலைக்காட்சிகளை, மிகவும் கவுரமான முறையில் மோடிக்கு சேவை செய்கிற ஊதுகுழல்களாக மாற்றியிருக் கிறார்கள்.

உலகில் அதிக எண்ணிக்கையில்

மாடுகள் உள்ள நாடு இந்தியா

எனவே, பொய்யை விதைக்கிறார்கள்; மெய்யை மறைக் கிறார்கள். இப்பொழுது அவர்களிடமிருந்தும் இந்த நாட்டை யும், மக்களையும் காப்பாற்றியாகவேண்டும். எனவேதான், நாங்கள் அத்துணை பேரும் இங்கே கூடியிருப்பது,  இந்த மேடைக்காக மட்டுமல்ல, அடுத்த தேர்தலுக்காக அல்ல - இந்தத் தமிழ்நாடு மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று சொன்னால், இந்தியாவிலேயே அந்த இயக்கத்தை முதன்முதலாக நடத்தி, நேற்றுவரையில் பரவாயில்லை - ஒரு மாநிலத்தினுடைய சுயாட்சிக்காக, கவுரவத் திற்காக பலவற்றிலும் மாறுபட்டு இருக்கலாம். திராவிட இயக் கம் அதில் விட்டுக் கொடுத்ததில்லை. அது இப்பொழுது ஏலம் போய்விடுமோ? இடையில் பசுவைக் காட்டி கொன்று விடுவானோ என்கிற கவலை வந்திருக்கிறது.

நாம் தமிழ்நாட்டு மக்கள் என்பதை விட்டுவிட்டு, உலகம் முழுமையிலும் கணக்கெடுத்ததில், தலைகளை எண்ணினால், உலகில் அதிக எண்ணிக்கையில் மாடுகள் உள்ள நாடு இந்தியா. மாமிசத்தை ஏற்றுமதி செய்வதோடு மட்டுமல்ல, எலும்புகள், கொம்புகள் இவற்றையும் நாம் ஏற்றுமதி செய்கிறோம். இந்த மாட்டு எலும்புகளிலிருந்துதான் பிலிமிற்கு மூலப்பொருள் கிடைக்கிறது. எனவே, அதனையெல்லாம் ஏற்றுமதி செய்யக்கூடியவர்கள் வேறெங்கும் அல்ல - குஜராத்தில்தான் இருக்கிறார்கள்.

அதேபோல, டில்லியிலிருந்து பால் வற்றியவுடன் மாடுகள் நேபாளத்திற்கும், பங்களாதேசத்திற்கும் செல்கிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் வரும் வருமானத்திற்கு மாற்று உண்டா?

விவசாயிகளைக் காப்பாற்றாத நீ - மாடுகளைக் காப்பாற்றப் போகிறாயா?

எனவேதான், மிக அழகாக அழுத்திக் கேட்டார் - நாடு முழுமையிலும் தண்ணீர் பஞ்சம்; இன்றைக்கும் குடிக்க தண்ணீர் இல்லை. டில்லியில், தமிழக விவசாயிகள் சென்று போராட்டம் நடத்தி, அழுது புலம்பி - அவர்கள் அமிர்தம் கேட்கவில்லை - நாங்கள் கொடுக்கும் மனுவை எடுத்துக் கொள்கிறானா? அவர்களை எட்டிப் பார்க்காத அந்த மனிதன், பசு மாடுகளைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொன்னால், அந்தப் பசுவையே காப்பாற்றுவதற்காகத்தானே விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்களையே காப்பாற்றாத நீ, மாடுகளைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொன்னால், அதுதான் அவர்களது தொழில்; நாடகம்.

கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்யவேண்டும்

எனவே, இந்த சூது நிறைந்த இந்தத் திட்டத்தைக் கட்டாயம் எதிர்க்கவேண்டும். தமிழ்நாடு அரசு நாளைக்காவது அரசின் சார்பில், தமிழக மக்களின் சார்பில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று சொல்வதோடு, சென்னை அய்.அய்.டி.யில் மாணவரைத் தாக்கிய ஏபிவிபி அமைப்பின் மாணவர்களின்மீது உடனடியாக கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்யவேண்டும்.

இல்லையானால், பகிரங்கமாக நீங்கள் சொல்லுங்கள்; நாங்கள் நேற்றுவரை அம்மாவைத் துதித்தோம்; இன்றுமுதல் மோடியை துதிக்கப்போகிறோம் என்கிற உண்மையையாவது சொல்லி விடுங்கள்.

எனவே, நாடு உங்கள் முடிவை தெரிந்துகொண்டால், பிறகு அவர்கள் எந்த வழியில் போவது என்பதை முடிவு செய்துகொள்வார்கள்.

தந்தை பெரியாரால்

தெளிவு பெற்றவர்கள் நாம்!

இங்கே கூடியிருக்கின்ற நாம் ஏற்கெனவே தெளிவு பெற்றவர்கள். சொந்தமாக இல்லை என்றாலும், தந்தை பெரியாரால் தெளிவு பெற்றவர்கள். எனவே, அதனை மேலும் துரிதப்படுத்தவேண்டிய - போர்க்களம் காணவேண்டிய கட்டாயம் - வரலாறு நம்மீது திணித்திருக்கிறது. அது ஒரு வகையில் நல்லது.

ஏனென்றால், பேசியே பொழுதைக் கழிக்காமல், மேற்படி யான்களைக் கவனிப்பதில், அவனுக்கு அடிக்கக்கூடிய அள விற்கு ஒரு ஆண்மை வந்திருக்கிறது என்றால், திருப்பி அடிப் பதற்கு, மற்றவர்களுக்கும் கைகள் இருக்கிறது என்று காட்ட வேண்டிய தருணம் - அந்தத் தருணம் இப்போது வந்திருக் கிறது - நாம் காட்டவேண்டும் - அதில் உறுதியாக ஒன்றுபட்டு இருக்கவேண்டும்.

இந்த நிலையில், நமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளைக் காட்டி, எந்தப் பிளவையும் செய்யவேண்டாம் என பணி வோடு வேண்டி, இந்த வாய்ப்பை ஏற்படுத்திய, அய்யா ஆசிரி யர் அவர்களுக்கும், கவிஞர் பூங்குன்றன் அவர்களுக்கும் வாழ்த்துகளை, நன்றியை மீண்டும் தெரிவித்து, என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner