எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழர் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறதா?

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

மதுரை, ஜூன் 14 -மதுரை அருகே கீழடியில் அகழாய்வுப் பணி மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்ததுஏன்? என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டது; அகழாய்வு செய்யப்பட்ட இடம் மூடப்பட்டது; அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடு செய்யாமல் அவற்றை பெங்களூரு கொண்டு சென்றது போன்றவற்றை பார்க்கையில் அவை தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் முயற்சியாகவே உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் தொல்லியல்துறையின் பெங்க ளூரு பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு நடைபெற்றது.இதில், 2,500 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்து விளங்கிய நகர நாகரிகம் புதையுண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகர நாகரிகத்திற்கான கட் டட அடித்தளம், கால்வாய் அமைப்புகள், சுட்ட செங்கற்களால் ஆன வீட்டுச் சுவர்கள், உறைக் கிணறு கள், நுட்பமான வேலைப்பாடு கொண்ட மண் பானைகள் என 5 ஆயிரத்து 800 அரிய பொருட்கள் கிடைத்தன.

தமிழ், பிராமி எழுத்துக்களுக்கான சான்றுகளும் கிடைத்தன. மொத்தம் 110 ஏக்கர் அளவிற்கு அக ழாய்வு மேற்கொள் ளப்பட வேண்டிய நிலையில், இதுவரை ஒரு ஏக்கர் அளவிற்கே அகழாய்வு நடந் திருப்பதும், அதற்குள்ளாகவே ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்ததும் அகழாய்வுத் துறை யினரிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.ஹரப்பா, மொகஞ்சதாரோவுக்கு முந்தைய ஒரு நகர நாகரிகம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், கீழடி ஆய்வின் மூலம் அதுதகர்க்கப்படும் என்றும் தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்வதாகவும் இதுஇருக்கும் என்றும் வரலாற்றாசிரியர்கள் தெரிவித் தனர். ஆனால், அகழாய்வுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்த மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் எழுந்த போராட்டங்களுக்குப் பிறகு, நிதி ஒதுக்கீடு செய்தது; அதேநேரம் மிகச்சிறப்பாக பணியாற்றி வந்த கீழடி அகழாய்வுக் கண்காணிப்பாளரான அமர்நாத் ராமகிருஷ்ணனை திடீரென இடமாற்றம் செய்தது. ஏற்கெனவே, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட் களை கார்பன் சோதனைக்கு அனுப்பாமலும், அவற்றை தமிழகத்திலேயே காட்சிப்படுத்தாமல், பெங்களூருவுக்கு கொண்டு சென்றதும் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதிகாரியையும் மத்திய அரசு இடம் மாற்றியது வருத்தத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.எனினும் மத்திய பாஜக அரசு, அதிகாரியை மாற்றும் முடிவை கைவிடவில்லை. மத்திய அரசுப் பணியாளர் தீர்ப்பாயம் அளித்த பரிந்துரையைக் கூட அது ஏற்கவில்லை. புதிதாக சிறீராமன் என்பவரை நியமித்தது.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய் வில் 2000 ஆண்டு பழைமையான 5300 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன: இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன; அதே நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன; எனவே, கீழடியில் அகழ்வாய்வை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப் போது, சிறப்பு அரசு வழக்குரைஞர் கோவிந்தன் வாதிடும்போது, கீழடியில் 2 கட்ட அகழாய்வு முடிந்துள்ளது; தற்போது 3- ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன; கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க தமிழக அரசு 2 ஏக்கர் இடம் ஒதுக்கியுள்ளது;

அங்கு அருங்காட்சியகம் அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். தொல்லியல்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்குரைஞரோ, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங் கால பொருட்களை ஆய்வுக்காக பெங்களூரு எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது என்றார்.அப் போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்த பழங்கால பொருள்களை ஏன் பெங்களூருவுக்கு கொண்டு செல்ல வேண்டும்; சிவகங்கையில் வைத்தே ஆய்வு செய்யலாமே? என்றனர். பெங்களூருவில்தான் பழங்கால பொருட்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் உள்ளனர் என்றால், அவர்களை சிவகங்கைக்கு வரவழைத்துக்கூட ஆய்வு செய்யலாமே என்றும் தெரிவித்தனர்.

மேலும், கீழடியில் அகழாய்வு பணியை முன் னின்று நடத்தியதொல்லியல் துறை கண்காணிப்பாளர் இடமாறுதல் செய்யப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிகாரி இடமாற்றப்பட்டதும், அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டதும் தமிழர்களின் வரலாற்றை மறைக்க நடக்கும் முயற்சி போல உள்ளது என்றும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர் விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner